நினைவுகள் மொத்தமும் இழந்த பிறகும், மீண்டும் அதே ஆணுடன் காதலில் விழுந்த அதிசய பெண்!

Posted By:
Subscribe to Boldsky

சின்ன சின்ன சண்டைகள், கருத்து வேறுபாடுகள் காரணமாக முறுக்கிக் கொண்டு பிரிந்து செல்லும் காதலர்கள் தான் இந்த தலைமுறையில் அதிகம் என பலரும் குற்றம் சாட்டுவார்கள். ஒவ்வொரு தலைமுறையும் அதன் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது காதலில் மாற்றங்கள் கண்டு தான் பயணித்து வந்துள்ளனர்.

ஆனால், இங்கு ஒரு பெண், நோய் காரணமாக தனது மொத்த நினைவுகளையும் இழந்த பிறகும், தான் முன்னர் காதலித்த அதே நபரின் மீது மீண்டும் காதல் கொண்டு அதிசயிக்க வைத்துள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெஸிகா ஷார்மன்!

ஜெஸிகா ஷார்மன்!

ஜெஸிகா ஷார்மன், 19 வயது இளம் பெண். டன்பிரிட்ஜ் வெல்ஸ் எனும் பகுதியை சேர்ந்த இவர் தனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்து தெரிந்துள்ளார்.

Image Source

நோய்!

நோய்!

Seizure எனும் நோயால் இவர் பாதிக்கப்பட்டார். இதன் தாக்கத்தால் இவர் தன்னுடைய மொத்த நினைவுகளையும் இழந்தார். பெற்றோர், காதல் அனைத்து உறவுகளையும் மறந்து போனார்.

ரிச்சர்ட் பிஷப் !

ரிச்சர்ட் பிஷப் !

ஜெஸிகா ரிச்சர்ட் பிஷப் எனும் நபரை காதலித்து வந்தார். ஆனால், நினைவுகள் இழந்த பிறகு ரிச்சர்ட் பிஷப் யார் என்றே அவரால் அறிய முடியவில்லை. புகைப்படங்கள் பார்த்து மெல்ல, மெல்ல தனது பெற்றோர்களை அறிந்துக் கொண்டார்.

Image Source

காதல் மீட்டெடுப்பு..?

காதல் மீட்டெடுப்பு..?

படங்கள் கண்டு பெற்றோரை அறிந்தது போல, காதலை அறிய முடியவில்லை ஜெஸிகாவால். ஏதோ புதியதாய் ஒரு நபருடன் பழகுவது போன்று தான் பழக முடிந்தது. அந்த காதல் அவருக்குள் ஆரம்பத்தில் வரவே இல்லை.

அக்கறை...

அக்கறை...

ரிச்சர்ட் பிஷப் தன் மீது காட்டிய அக்கறையின் காரணத்தால் அவர் மீது மீண்டும் காதல் கொண்டார் ஜெஸிகா. அவருடன் டேட் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சத்தியம்!

சத்தியம்!

ஜெஸிகா மீண்டும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவர் மீண்டும் நினைவுகளை இழக்க கூடும். ஆகையால் அவர் மீண்டும் ரிச்சர்ட் பிஷப் மற்றும் பெற்றோரை மறந்து போக கூடும்.

ஆனாலும், தனது பெற்றோர் மற்றும் ரிச்சர்ட் பிஷப் தன்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள் என நம்புவதாக கூறுகிறார் ஜெஸிகா.

வேண்டுதல்!

வேண்டுதல்!

இவ்வளவு அழகான பெண், இவரை விட அழகான காதல், அக்கறை மற்றும் அன்பை குறையாமல் காட்டும் பெற்றோர் மற்றும் காதலர். இத்தனையும் கொண்டுள்ள ஜெஸிகா விரைவில் பூரண குணமடைவார் என வேண்டிக் கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

After Lost Her All the Memories, This Girl Fall in Love Again with the Same Person

After Lost Her All the Memories, This Girl Fall in Love Again with the Same Person
Subscribe Newsletter