திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையெனில் கொன்றுடுவேன் - மிரட்டிய தாய் ! பதிலடி தந்த மகள் !!

Posted By:
Subscribe to Boldsky

இங்கிலாந்தில் உள்ள சீக்கிய குடும்பத்தில் பிறந்து வளர்கிறார் இந்தப் பெண். உடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள் மற்றும் ஒரே ஒரு சகோதரன். ஜஸ்விந்தர் சங்கேத்ரா என்ற அந்தப் பெண்மணி குடும்பம், சமூகம் என்று மிகவும் கட்டுப்பாடுடன் வளர்க்கப்படுகிறாள்.

A real life story of a girl who opposed her marriage

தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்கள் சாதியினரைத் தவிர பிறரிடம் பேசுவதே பெரும் பாவம் என்று சொல்லித்தரப்படுகிறது அதோடு இவை கடைபிடிக்கப்படுகிறதா என்றும் மிகவும் கண்டிப்பான முறையில் கண்காணிக்கப்படுகிறது. தனிமனித சுதந்திரம் என்பதும் சுய விருப்பம் என்பது அங்கே அறிமுகமில்லாத வார்த்தைகளாகவே இருந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆச்சரியம் :

ஆச்சரியம் :

மிகவும் சிறுவயதில் ஜஸ்விந்தருக்கு ஒரே ஆச்சரியம் ஏன் தெரியுமா தன்னுடைய சகோதரிகள் பதினைந்து வயதினை நெருங்கும் போதே ஒவ்வொருவராக பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

அதோடு யாரோ ஒருவருக்கு திடீரென்று திருமணமும் செய்து வைக்கப்படுகிறது.

புகைப்படத்தில் பார்த்த யாரோ ஒருவனுக்கு மனைவியாக இந்தியாவிற்கு சென்றுவிடுகிறார்கள் திருமணம் முடிந்த பிறகு அவர்களைப் பற்றிய பேச்சு இல்லை.

அவர்கள் வீட்டில் இல்லையே என்கிற கவலை யாருக்கும் இல்லை.

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நாங்கள் சுரண்டப்படுகிறோம் என்று ஜஸ்விந்தர் முதன் முதலாக உணர்கிறார். இப்படி ஒவ்வொன்றுக்கும் நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களின் சகோதரனுக்கு எல்லாமே கேட்காமல் கிடைக்கிறது.

தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய விருப்பமென்ன என்று தைரியமாக சொல்ல முடிகிறது என்பதை உணர்கிறார்.

Image Courtesy

14 வயதினிலே :

14 வயதினிலே :

ஒரு நாள் பள்ளியை விட்டு ஜஸ்விந்தர் வந்த போது அவருடைய அம்மா அவருக்கு ஒரு புகைப்படத்தை காண்பிக்கிறார் அப்போது ஜஸ்விந்தருக்கு வயது 14.

அப்போது தான் பெற்றோர் சொல்லும் ஆணையே திருமணம் செய்து கொள்வேன் என்று சத்தியம் வாங்கியது நினைவுக்கு வருகிறது.

எட்டு வயதான போதிருந்தே பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார்கள் அதுவும் தங்கள் சொல்லும் பையனையே மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.

இல்லை. இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. யாரென்றே தெரியாத ஒருவனை அதுவும் என்னைவிட பல மடங்கு வயதில் மூத்தவரை எப்படி என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இதில் எனக்கு விருப்பமில்லை. தன்னுடைய முதல் எதிர்ப்பை பதிவு செய்கிறார்.

Image Courtesy

நிர்பந்தம் :

நிர்பந்தம் :

ஜஸ்விந்தருக்கு முன்னால் பிறந்து குழந்தைத் திருமணம் செய்து கொண்ட யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத போது ஜஸ்விந்தரின் இந்த எதிர்ப்பு குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பல வகைகளில் ஜஸ்வந்தரை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க குடும்பத்தார் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஜஸ்வந்தருக்கு 15 வயது நெருங்கும் போது ஜஸ்வந்தர் பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நிர்பந்தங்கள் அதிகரிக்கிறது.

ஜஸ்வந்தர் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கான சரியான காரணம் புரியாமல் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்.

Image Courtesy

கொடுமைகள் :

கொடுமைகள் :

தாங்கள் சொல்லும் ஆணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொல்லும் வரையில் அறையின் கதவை திறக்க மாட்டோம் என்று சொல்லி ஓர் இருட்டறையில் அடைத்துவிடுகிறார்கள்.

கழிவறைக்கு செல்லக்கூட அனுமதியில்லை. அவ்வப்போது உள்ளே வைக்கப்படும் உணவினை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு நாளில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் வைக்கப்படும்.

சிறுமியான ஜஸ்வந்தரால் இந்த கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும். என்ன செய்வது? என்று யோசித்தாள்.

சரி,முதலில் இங்கிருந்து வெளியேற வேண்டும் அது தான் முதல் வழி என்று யோசித்தவள் குடும்பத்தினரிடம் தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாக கூறினார்.

ஆம், நீங்கள் சொல்லும் ஆணையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று குடும்பத்தாருக்கு உறுதியளித்தார். ஆனால் அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது ஜஸ்விந்தர் இங்கிருந்து தப்பிக்க போட்ட ப்ளான் இது என்று.

ஜஸ்வந்தரின் உறுதி :

ஜஸ்வந்தரின் உறுதி :

இது தெரியாமல் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். அன்றைய தினம் ஜஸ்விந்தர் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

வீட்டிலிருந்து 150 கி.மீ., தூரத்தை நடந்தே கடந்தார். எங்கே செல்வது,யாரைப் பார்ப்பது,எங்கே தங்குவது என்று எதுவுமே தெரியவில்லை.

திருமணத்தில் விருப்பமில்லை என்பது மட்டும் உறுதி.

மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. பதினைந்து வயது சிறுமியைக் காணவில்லையென போலீசும் முழு வீச்சில் தேடுதலில் ஈடுபடுகிறது.ஒரு வழியாக தேடுதல் வேட்டையின் போது போலீசில் சிக்குகிறார் ஜஸ்விந்தர்.

Image Courtesy

இரண்டு வாய்ப்புகள் :

இரண்டு வாய்ப்புகள் :

எங்கே மீண்டும் தன்னை அந்த வீட்டில் கொண்டு சேர்த்து விடுவார்களோ என்று பயந்து,இல்லை அந்த வீட்டிற்கு நான் செல்லமாட்டேன். எனக்கு அங்கே செல்ல விருப்பமில்லை என்று கூறுகிறார்.

நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்ற தகவலை மட்டும் சொல்லிடுங்கள் என்று கெஞ்ச போலீசாரும் வீட்டிற்கு போன் செய்கிறார்கள். அப்போது,பேசிய ஜஸ்வந்தரிடம் அவருடைய அம்மா இரண்டு வாய்ப்புகளைத் தருகிறார்.

தங்களின் மகளாக தாங்கள் சொல்லும் ஆணை திருமணம் செய்வது இன்னொன்று இனி நீ எங்களது மகளே இல்லை நீ இறந்துவிட்டாய் என்று நாங்கள் நினைத்து முற்றாக பிரிந்துவிடுவது என்ன உன் பதில் என்று கேட்கிறார்.

நான் வீட்டிற்கு வர மாட்டேன், யாரென்றே தெரியாத ஒருவனை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்பதிலும் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக நடக்கும் விஷயத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

அக்காள் பாசம் :

அக்காள் பாசம் :

அவ்வப்போது தன்னுடைய மூத்த சகோதரி ரொபினாவிடம் பேசுவதை தொடர்கிறார் ஜஸ்விந்தர்.

பெற்றோர் சொன்ன யாரோ ஒருவனை திருமணம் செய்து கொண்டு தினம் தினம் மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வந்த ரொபினாவுக்கு ஜஸ்வந்தரின் வார்த்தைகள் தான் ஆறுதல் அளித்தன.

இவ்வளவு கொடுமைகளை சகித்துக் கொண்டு ஏன் அதே வாழ்க்கை வாழ வேண்டும். அவனை விட்டு வா,என்று அழைக்க படிப்பு வேலை என்று ஏதுமில்லாமல் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது, என்னுடன் வந்து இருக்கலாமே என்று ஜஸ்விந்தர் அழைக்க,

முடியாது கணவரை விட்டு பிரிவது என்பது குடும்ப கௌரவத்திற்கு பெரும் இழப்பாக அமைந்திடும்.உறவுகள் மத்தியில் பெரும் அவமானமாக மாறிடும் என்று சொல்லி ஜஸ்வந்தரின் யோசனைகளை மறுக்கிறார் ரொபினா.

சமாதானம் :

சமாதானம் :

சரி, வேண்டாம். நீ இப்படியான சிக்கலில் இருக்கிறார். நீ மகிழ்ச்சியுடன் இல்லை தினம் தினம் செத்து பிழைக்கிறாய் என்பதையாவது வீட்டிற்கு தெரியப்படுத்து என்று ஜஸ்விந்தர் வர்புறுத்த,

ரொபினா தன் குடும்பத்தினருக்கு தெரிவிக்கிறார். இரு வீட்டினரும் பேசி சமாதானம் செய்து வைக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கொடுமைகளை பொறுக்க முடியாத ரொபினா தீக்குளித்து தற்கொலை செய்துகொள்கிறார்.

தன்னுடைய சகோதரி,இறந்துவிட்டாள் என்கிற அதிர்ச்சியை விட அவளின் மரணத்திற்கு குடும்பத்தினர் பேசிய பேச்சு தான் ஜஸ்விந்தருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாவுக்கு விளக்கம் :

சாவுக்கு விளக்கம் :

கணவரை விட்டு பிரிந்து வந்து குடும்பத்தின் கௌரவத்தை கெடுக்காமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாளே அதுவரை சந்தோசம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

ஒரு பெண்ணின் உயிரை விட குடும்ப கௌரவம் என்ன அவ்வளவு முக்கியமானது. இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது என்று புரியாமல் தவித்த அந்த இரவு தான் ஜஸ்விந்தரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

அழைப்புகள் :

அழைப்புகள் :

இதன் விளைவாக ஜஸ்விந்தர் கர்ம நிர்வானா என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். இதன் முக்கிய நோக்கமே திருமணம் என்ற பெயரில் நடக்கிற சுரண்டலை தவிர்க்க வேண்டும் என்பதே.

2008 ஆம் ஆண்டும் அரசாங்க உதவியுடன் ஹெல்ப்லைன் நம்பரை உருவாக்குகிறார். தினம் தினம் ஏகப்பட்ட அழைப்புகள். ஜஸ்விந்தர் எதிர்ப்பார்த்ததைவிட பல மடங்கு அதிகமானோர் தினம் தினம் பல்வேறு கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களை சுரண்டியது போதும் :

பெண்களை சுரண்டியது போதும் :

கர்ம நிர்வான மூலமாக பலரத வாழ்க்கையையும் உயிரையும் காப்பாற்றிய ஜஸ்விந்தர் உண்மையிலேயே ஹீரோ தான்.

திருமணம் என்பதோ யாரோ சொல்லி, குடும்பத்தினரின் நிர்பந்தத்தால் வருவது அல்ல திருமணத்தையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

அதோடு பெண்களுக்கு என ஒரு மனம் இருக்கிறது அதிலும் விருப்பங்களும் வெறுப்புகளும் இருக்கும்.

குடும்பத்தின் பெயரைச் சொல்லி கௌரவம் என்று காரணம் காட்டி பெண்களை சுரண்டியது போதும் என்பதை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஜஸ்விந்தர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A real life story of a girl who opposed her marriage

A real life story of a girl who opposed her marriage
Subscribe Newsletter