For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தாடியா? ட்ரிம்மா? கிளீன் ஷேவா? இது பெண்கள் அளிக்கும் ரேட்டிங்!

|

தாடி வைத்துக் கொள்ளும் ஆண்கள் மத்தியில் கடந்த இரு வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஐடி-யின் வருகைக்கு பிறகு கிளீன் ஷேவிங் செய்து திரிந்து வந்த நம்ம ஊர் ஆண்கள். இப்போது மீண்டும் தங்கள் தாடி மீதான காதலை வளர்க்க துவங்கியுள்ளனர்.

இதனால், டிசைன், டிசைன் ஹேர் கட்டிங்கை தாண்டி, டிசைன், டிசைனாக தாடியை கட் செய்து வருகின்றனர். அதிலும் இந்த அண்டர்கட் ஸ்டைல் தான் இப்போது உலக ஆண்கள் மத்தியில் பெருவாரியா அதிகரித்து வருகிறது.

ஆண்களின் தாடியின் மீதான மோகத்தை அதிகரிக்க இப்போது பெண்களும் ஒரு தகவலை ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிணாம உயிரியல்!

பரிணாம உயிரியல்!

சமீபத்தில் பரிணாம உயிரியல் ஆய்வு பத்திரிக்கையில் (Journal of Evolutionary Biology) வெளிவந்த ஆய்வறிக்கையில் தாடி வைத்த ஆண்கள் தான் நீண்ட கால உறவில் மிக கவர்ச்சியாக இருக்கிறார்கள் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்!

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் 8,520 பெண்களுக்கு மத்தியில் நடத்திய பெரிய ஆய்வில், பெண்களிடம் பல்வேறு ஆண்களின் புகைப்படம் கான்பிக்கப்பட்டு அதற்கு ஏற்ப அவர்களது உடலியல் ஈர்ப்பு, கவர்ச்சி குறித்து மதிப்பெண் இட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

வகைகள்!

வகைகள்!

இந்த ஆய்வில் கிளீன் ஷேவ், ட்ரிம் செய்த தாடி, நான்கு நாள் தாடி, முழுமையான தாடி என பலவகையான தாடி வைத்த ஆண்களின் புகைப்படங்கள் கான்பிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ரேட்டிங் செய்யப்பட்டது.

ட்ரிம் செய்த தாடி!

ட்ரிம் செய்த தாடி!

இந்த ஆய்வில் நான்கு நாள் தாடி / ட்ரிம் செய்த சிறிய அளவிலான தாடி வைத்துள்ள ஆண்கள் தான் அனைத்து பெண்களாலும் மிகவும் கவர்ச்சியான ஈர்ப்புடைய ஆண்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்விலும் கூட, நான்கு நாள் தாடி வைத்துள்ள ஆண்கள் தான் கவர்ச்சியாக இருக்கிறார்கள் என பெண்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழுமையான தாடி!

முழுமையான தாடி!

நீளமான அல்லது முழுமையான தாடி வைத்திருக்கும் ஆண்களை நீண்ட நாள் உறவில் இருக்க ஈர்ப்பான கவர்ச்சியானவர்கள் என பெண்கள் கருத்து தெரிவித்து ரேட்டிங் செய்துள்ளனர்.

கோபக்காரர்கள்!

கோபக்காரர்கள்!

முகத்தின் தாடியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் மிக கோபமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள் போன்ற தோற்றம் அளிக்கிறார்கள் என்றும், தாடியின் அளவு குறைவாக அல்லது கிளீன் ஷேவ் செய்துள்ளவர்கள், மென்மையானவர்கள் போன்ற தோற்றம் அளிக்கிறது என்றும் பெண்கள் மேலும் தங்களது ரேட்டிங்கில் தெரிவித்துள்ளனர்.

ஆளுமை, ஆதிக்கம்!

ஆளுமை, ஆதிக்கம்!

இன்றைய ஃபேஷன் உலகில் தாடி வைப்பது அதிகரித்து வருகிறது. பெண்களும் தாடி வைத்த ஆண்கள் தான் ஆளுமை மற்றும் ஆதிக்கம் உடையவர்கள் போன்ற எண்ணம் பிறக்கிறது என்றும் பெண்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

இலச்சினை!

இலச்சினை!

ஆண்மை, தைரியம், வீரம், ஆளுமை, ஆதிக்கம் போன்றவற்றுக்கு தாடி ஒரு இலச்சினை போன்று உள்ளது என்றும் பெண்கள் தெரிவித்துள்ளனார்.

வயது வந்ததற்கும் தாடிக்கும் சம்மந்தம் இல்லை எனிலும், தாடி ஒரு ஆணை முதிர்ச்சியான ஆணாக எடுத்துக் காட்டுகிறது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men with beards ‘best for long-term relationships’ - study

Men with beards ‘best for long-term relationships’ - study
Desktop Bottom Promotion