For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித நேயம் இன்னும் இறந்திடவில்லை என்று நிரூபித்த தமிழக மக்கள்!!

|

தொழிநுட்ப வளர்ச்சி கண்ட இந்த நூற்றாண்டில் மனித நேயம் மாண்டுவிட்டது என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. ஆம், சென்ற வாரம் வரை அப்படி தான் நானும், நீங்களும் கூட நினைத்து வந்தோம். ஆனால், கடந்த ஓர் வாரமாக மட்டுமல்ல, ஒவ்வொரு முறை உலகில் எங்கேனும் மனிதருக்கு பெரும் துயர் எனும் போது மனதில் ஏற்படும் ஒரு துளி வருத்தம் இன்னும் வற்றிப்போய்விடவில்லை என்பதே நிதர்சனம்.

குஜராத் பூகம்பம், வட இந்தியாவை தாக்கிய வெள்ளப்பெருக்குகள் போன்றவை ஏற்பட்ட போதெல்லாம் துடித்த அதே உள்ளங்கள் இன்று சென்னை மக்களுக்காகவும் துடித்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக சென்னையின் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு ஓரிரு வாரங்களில் வற்றிவிடும். ஆனால், மனிதர்களாகிய நமது மனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரம் வற்றிவிடாது என்பதற்கான மற்றுமொரு சான்றாக இன்றைய மக்களின் மனநிலை விளங்குகிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னிலை பாராத உதவி

தன்னிலை பாராத உதவி

தன்னிலை, தன்னலம் பாராது, குடியிருப்புகளில் தவித்துக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் மக்களை தேடி, தேடி காப்பாற்றி வருகிறார்கள் பொது மக்கள். இராணுவத்தின் உதவி கிடக்கும் முன்னர் இருந்தே, தண்ணீர் நிறைப்பும் டிரம், கயிறு போன்றவை கொண்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து வருகிறார்கள்.

உணவு தயாரிப்பு

உணவு தயாரிப்பு

வெள்ளப்பெருக்கு இல்லாத இடங்களில் இருந்து, நீர் சூழந்த இடங்களில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளித்து வருகிறார்கள் பொதுமக்கள்.

பிரபலங்கள் உதவி

பிரபலங்கள் உதவி

ஷாலினி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி போன்ற பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும் வாகனங்கள் கொடுத்ததும், பாதிப்பு இல்லாத இடங்களுக்கு மக்களை கூட்டி சென்றும் உதவிகள் செய்து சாதாரண மக்கள் கூட தங்களது சூப்பர் குணத்தால் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கிறார்கள்.

சென்னையுடன் கைகோர்த்த ஏனைய நகரங்கள்

சென்னையுடன் கைகோர்த்த ஏனைய நகரங்கள்

கோவை, பெங்களூர் போன்ற பல பகுதிகளில் இருந்து போது மக்கள், வானொலி நண்பர்கள் போன்றவர்கள் லாரி, கார்கள் மூலம், பல பகுதிகளில் இருக்கும் மக்களிடம் இருந்து, துணி, உணவு, பிஸ்கட், பெண்களுக்கான பாதுகாப்பு பொருட்கள் என முடிந்த வரை கிடைப்பதை எல்லாம் சேகரித்து சென்னை மக்களுக்காக கொண்டு செல்கிறார்கள்.

மனதில் ஈரம் காயாது

மனதில் ஈரம் காயாது

கண்டிப்பாக சென்னையின் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு ஓரிரு வாரங்களில் காய்ந்துவிடும். ஆனால், ஊர், பெயர் தெரியாது, தான் தரும் பொருள் யார் கைக்கு செல்கிறது என்று தெரியாது, தூய மனதுடன் உதவி வரும் மக்களின் மனதில் இருக்கும் அந்த ஈரம் எத்தனை வருடங்கள் ஆயினும் கூட காயாது.

பணம் கொடுத்தும் உதவும் மக்கள்

பணம் கொடுத்தும் உதவும் மக்கள்

உணவு, உடை, இடம் மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் யாரேனும் அவசரம் என்றால் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் தாங்கள் பணம் கட்டுகிறோம் என்று உதவும் அளவு மக்கள் தங்களது மனித நேயத்தையும், உறவு பாலத்தையும் வெளிகாட்டி வருகிறார்கள்.

இயற்கைக்கு நன்றி

இயற்கைக்கு நன்றி

அவ்வப்போது உந்தன் சீற்றத்தை காட்டி மிரளவைத்தாலும், அந்த சீற்றத்தின் மூலம், மனிதனின் மனிதில் இருக்கும் ஈரத்தை வெளிப்பட வைக்கவும் நீயே காரணமாய் இருக்கிறாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Humanity Is Still Alive Chennai Flood Proved

Humanity is alive, human relationship bonds getting stronger, chennai flood is the proof for this.
Desktop Bottom Promotion