எப்பவுமே அண்ணன் தம்பிங்கதான் பெஸ்ட் 'நண்பேண்டா'... ஏன்னு தெரியுமா?

Posted By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

நமக்குச் சகோதரன் இருப்பது இறைவன் கொடுத்த வரம் தான்! வாழ்க்கையில் பல பாடங்களை நாம் நம் சகோதரர்கள் மூலம் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் நம்முடைய உடன் பிறந்த, பிறவாத சகோதரர்கள் மட்டுமல்ல, அவர்கள் நம் வாழ்க்கையில் கடைசி வரை நம் தோளோடு தோள் கொடுக்கும் தோழர்களும் கூட!

உங்கள் மகளிடம் உறுதியான உறவை வளர்க்க சில டிப்ஸ்...

நாம் நம் நண்பர்களிடம் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருப்போம். அவற்றில் சில விஷயங்களில் நமக்கு ஏற்ற தீர்வு கிடைக்காமல் போயிருக்கலாம். அதே நேரத்தில், நம் சகோதரர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களுக்குப் பெரும்பாலும் கண்டிப்பாகத் தீர்வுகள் கிடைத்துவிடும்.

கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!

'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உள்ளது. ஆம், வாழ்க்கையில் நமக்கென்று ஒரு சகோதரன் என்று ஒருவன் இருந்தால், அது நமக்கு யானை பலத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட நம் சகோதரர்கள் தான் நம் வாழ்வின் கடைசி வரை சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்பதற்கான 12 அருமையான காரணங்கள் குறித்து கொஞ்சம் அலசி ஆராய்வோமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'நாங்க இருக்கோம்!'

'நாங்க இருக்கோம்!'

எந்த விதமான பிரச்சனைகள் நமக்கு ஏற்பட்டாலும், அவற்றில் நமக்கென்று உதவ நம் சகோதரர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆகவே அவர்களுடைய ஆலோசனையை நாம் எப்போதும் நாடலாம்.

எப்போதும் சப்போர்ட்

எப்போதும் சப்போர்ட்

நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல. சில பிரச்சனைகளை நாம் உணர்வதற்குள்ளாகவே அவை நம்மைத் தாக்கிவிடும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் நம் சகோதரர்கள் நம் பின்னே துணையாக நிற்பார்கள்.

சிறந்த ஆலோசகர்

சிறந்த ஆலோசகர்

ஒரு சில பிரச்சனைகளுக்காக நாம் சிலரிடம் போய் ஆலோசனைகளைக் கேட்டால், அவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். ஆனால், நம் சகோதரர்கள் அப்படியல்ல. அவர்களுடைய ஆலோசனை 100% அக்மார்க் தரம் கொண்டதாகும்.

நமக்காக நேரம் ஒதுக்குபவர்

நமக்காக நேரம் ஒதுக்குபவர்

எந்த விஷயத்திலும் நம் சகோதரர்கள் நமக்கென நேரத்தை ஒதுக்கி வைப்பார்கள். நமக்காகத் தம் நேரத்தை ஒதுக்குவது அவர்களுக்கும் எளிதாக இருக்கும்.

நம்மை வெறுக்க மாட்டார்கள்

நம்மை வெறுக்க மாட்டார்கள்

சில விஷயங்களை அல்லது பிரச்சனைகளை நாம் விட்டுக் கொடுக்க நினைத்தாலும், நம் சகோதரர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நமக்காகப் போராடி, அந்தப் பிரச்சனைகளை வெற்றிகரமாகச் சமாளித்து விடுவார்கள்.

நம்மை சந்தோஷப்படுத்துவர்

நம்மை சந்தோஷப்படுத்துவர்

வாழ்க்கையில் நாம் எவ்வளவு சோகத்தில் துவண்டு கிடந்தாலும், தம்முடைய அன்பாலும் பிரியத்தாலும் நம் சகோதரர்கள் எதையாவது செய்து நம்மை மகிழச் செய்வார்கள். நம் முகத்திலும் ஒரு புன்னகை பிறக்கும்.

நமக்கென புதிய விஷயங்கள்...

நமக்கென புதிய விஷயங்கள்...

நம் அன்புச் சகோதரர்கள் எப்போதுமே நமக்கென ஒரு புதிய விஷயத்தைக் கைவசம் வைத்திருப்பார்கள். நமக்கு நிறைய போர் அடிக்கும் வேளையிலே அவர்களைத் தொடர்பு கொண்டால், அந்தப் புதிய விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.

காரியங்கள் கச்சிதமாக முடியும்!

காரியங்கள் கச்சிதமாக முடியும்!

நமக்கென ஒரு காரியத்தை எடுத்துச் செய்யும் நம் சகோதரர்கள், அதை முழுவதுமாகச் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், 'எள் என்றால் எண்ணெய்'யாக அவர்கள் நின்று காரியத்தை முடித்துக் கொடுப்பார்கள்.

நமக்கு எப்போதும் பாதுகாப்பு!

நமக்கு எப்போதும் பாதுகாப்பு!

நம் சகோதரர்கள் தான் நமக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். எந்தப் பிரச்சனையிலும் நம்மை அம்போவென்று விட்டுவிட மாட்டார்கள்.

நல்ல இசையை அறிமுகப்படுத்துவர்!

நல்ல இசையை அறிமுகப்படுத்துவர்!

ஆன்மாவின் மொழி தான் இசை என்பார்கள். அப்படிப்பட்ட புதிய புதிய இசைகளை நம் சகோதரர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். தாம் ரசித்துச் சுவைத்த அனைத்துப் பாடல்களையும் நம்மிடம் கொடுத்து, நம்மையும் ரசிக்கச் சொல்வார்கள்.

நம்மை உற்சாகப்படுத்த...

நம்மை உற்சாகப்படுத்த...

நம்மை எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க நம் சகோதரர்களைத் தவிர யாராலும் முடியாது. இதனால் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்!

நேருக்கு நேராய் சொல்வர்!

நேருக்கு நேராய் சொல்வர்!

எத்தகைய மூடி மறைக்க வேண்டிய விஷயமாக இருந்தாலும் சரி, அதை நம்மிடம் துளியும் மறைக்காமல் நம் கண்களைப் பார்த்து சொல்வதில் வல்லவர்கள் நம் சகோதரர்கள். அப்படிப்பட்ட ஒரு திறந்த புத்தகமாக அவர்கள் விளங்குவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Reasons Why Brothers Are The Best Friends Forever

Here are 12 reasons why your brother is your best friend forever. Read on...