Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் பிரிகிறார்களா? என்ன ஆச்சு..!
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றது. எப்போதும் திரையுலகில் அதிகமாக எல்லோராலும் பேசப்படும் தம்பதிகள் இவர்கள்தான்.. இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்..
கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் ஜோடி குறித்து ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இதற்கு காரணம் இந்த ஜோடி ஒருவரையொருவர் விவாகரத்து செய்ய விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு யூகமாகவே பேசப்பட்டு வருகிறது..

அம்பானி இல்ல திருமண விழாவில் தனியாக ஐஸ்வர்யா
ஆனால் இதுகுறித்து இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை.. ரசிகர்களுக்கு வெளிப்படையாக ஏதும் சொல்லாமலும் மெளனம் சாதித்து வந்தனர்.. அதுமட்டுமல்லாமல் தற்போது கோலாகலமாக நடைபெற்ற அம்பானி குடும்பத்து திருமணத்தில் தன்னுடைய பெற்றோருடன் அபிஷேக் பச்சன் பங்கேற்ற நிலையில், ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக பங்கேற்றார். தன்னுடைய மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தார்.
அமிதாப் பச்சனின் முன்னாள் காதலியால் பிரச்சனை
அதுமட்டுமல்லாமல் நடிகர் அமிதாப் பச்சனின் முன்னாள் காதலி என்று கூறப்படும் நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய மாமியார் ஜெயா பச்சனை சந்தித்து பேசாத ஐஸ்வர்யா ராய், மாறாக அந்த பழம்பெரும் நடிகையான ரேகாவை சந்தித்து கட்டியணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..
அமிதாப் பச்சன் வீட்டில் சண்டைக்கு காராணம் இதுதான்
மேலும் அமிதாப் பச்சன் வீட்டில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கியமான காரணம், ரூ.3,190 கோடி சொத்துக்கு உரிமையாளரான அமிதாப் பச்சன் தனது ஜூஹு பிரதிக்சா பங்களாவை மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.. இதைத் தொடர்ந்து, பச்சன் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வெளிவரத் தொடங்கின.. அதுமட்டுமல்லாமல் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளுக்குள்ளே சமீபத்தில் பல விவாகரத்து நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
விவகாரத்து பதிவில் லைக் செய்த அபிஷேக்
இந்நிலையில் அபிஷேக் பச்சன் செய்த ஒரு காரியம் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியாக்கியது.. சமூக வலைதளங்களில் உலா வந்த அவர்களது விவாகரத்து குறித்த வதந்தி பதிவை லைக் செய்துள்ளார்.. இதனால் ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறார் என்று மீண்டும் பேசப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை ரசிகர்கள் தற்போது தேடி வருகின்றனர்.
அபிஷேகின் புதிய கார்
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிஷேக் பச்சன் ஒரு விசயத்தை செய்துள்ளார்.. அது என்னவென்றால், அபிஷேக் தனது கார் சேகரிப்பில் மற்றொரு பளபளப்பான சொகுசு காரை தற்போது வாங்கியுள்ளாராம்..அதில் தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் விருப்பமான எண்ணை புதிய காரில் பெற்று அவரை ஆச்சரியப்படுத்தியதாக அபிஷேக் எழுதியிருந்தார். இதன் மூலம் அபிஷேக் மற்றும் ஐஸ் பற்றிய வசந்திகளுகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அபிஷேக் பச்சனின் புதிய கார் கருப்பு நிறத்தில் உள்ளது. அவரது எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் 5050 ஆகும், இது ஐஸ்வர்யாவின் விருப்பமான எண் ஆகும். அபிஷேக்கின் முந்தைய கார் எண் ஐஸ்வர்யாவின் வெள்ளை நிறமான 'மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ்' இப்போது விற்கப்படுகிறது. இது தவிர அபிஷேக்கின் பிறந்தநாளும் பிப்ரவரி 5 ஆகும்.
5050 என்ற எண்ணின் சிறப்பு என்ன?
5050 என்ற எண் விஐபி எண்ணாகக் கருதப்படும் எண்களில் இதுவும் ஒன்று, இதற்கு சிறப்புக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, ஷாருக்கான் தனது பெரும்பாலான கார் எண்களில் 555 என்ற எண்ணை அதிகம் பயன்படுத்துகிறார். எண் 5050 ஒரு தேவதை எண்ணாகவும் கருதப்படுகிறது. ஏஞ்சல் எண் 5050 சமநிலை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது. இது நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சமநிலையைக் கண்டறிவதற்கான நினைவூட்டலாகும். அது நமது உறவுகள், வேலை அல்லது தனிப்பட்ட நல்வாழ்வு, தற்போதைய சூழ்நிலையை மதிப்பிடவும், சமநிலை உணர்வைக் கொண்டுவர தேவையான மாற்றங்களைச் செய்யவும் நம்மை ஊக்குவிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், அபிஷேக் பச்சனின் தங்கையான ஸ்வேதா பச்சன், அவரது மகன்தான் அகஸ்தியானந்தா. இவர் நடித்திருக்கும் முதல் படமான தி ஆர்ச்சீஸ் படத்தின் பிரீமியர் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள்.. அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியாக சென்றது விவகாரத்து குறித்த வதந்திக்கு தக்க பதிலடியாக அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications