Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
காதலை வெளிப்படுத்துவதற்கான சில சூப்பர் வழிகள்!!!
ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிகளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். சில நேரங்களில் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று நேரிடையாகவே கூட தெரிவிக்கலாம். இதை சொல்வதை விட செய்வது கடினம். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும். நீங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், காதலை எளிதாக நேராகவே சொல்லி விடலாம். அப்படிப்பட்ட நேரம் வரும் வரை நீங்கள் நிச்சயமாக வேறு பல வழிகளில் உங்கள் காதலை வெளிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது அவளின் ஆர்வத்தை நிலைநிறுத்தி வரும்.
அவளிடம் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பது தான் நீங்கள் தொடங்க வேண்டிய முதல் செயலாகும். எந்தவொரு பெண்ணும் மோசமானவனிடம் அன்பு கொள்ள விரும்பமாட்டாள். பரிவாகவும், தீர்க்க சிந்தையுடையுடனும், ஆதரவாகவும் மற்றும் அவளுக்கு தேவைப்படும் நேரத்தில் அவளுடன் இருப்பதுமே உங்கள் அன்பின் அறிகுறியாக இருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் உங்களுடைய அன்பை காதலை வெளிபடுத்த வேண்டியது அவசியம். ஒரு காதலனாக நீங்கள் அவளுக்கு சிற்சில பொருட்களை வாங்கி கொடுத்தால், நீங்கள் சொல்வதை விட அதிகமாக அவை பேசும். ஒரு மலர் கொத்தை கொடுத்தோ அல்லது கடிதத்தின் மூலம் நீ அவளின் மீது கொண்டிருக்கும் அன்பு உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது என்பதை அவளிடம் வெளிபடுத்துவது உன் அன்பை பிரதிபலிக்கும். 'நான் உன்னை காதலிக்கின்றேன்' என்று கூறும் முன் இவைகளை செய்வது அவசியம்.

பூக்களை தூது அனுப்புங்கள்
அன்பை காண்பிக்க இது பழமையான வழியாக இருந்hலும், எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்க வழிமுறையாகும். நீங்கள் உங்கள் இதயத்தில் சில எண்ணங்களை யோசித்து, அவளை கவருவதற்கு ஏற்ற சரியான பூங்கொத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடிதம் வரைதல்
நீங்கள் அவளை எப்போதும் நேருக்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில் அவளுக்கு உங்களது காதலைப் பற்றி, கவிதையாவோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும்.

வெளியே அழைத்துச் செல்லுதல் (Dating)
அன்பை வெளிபடுத்தும் காதலனாக நீங்கள் அவளை வெளியே டின்னருக்கோ, குளிர்பானம் அருந்தவோ அல்லது திரைப்படத்திற்கு அழைத்து செல்லவோ திட்டமிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உங்கள் காதலியை அழைத்து செல்வது உங்கள் காதலை வெளிபடுத்தும்.

அவளுக்காக சமையுங்கள்
உங்களுடைய காதல் நேரங்கள் எல்லாமே வெளியில் தான் நிகழ்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் டின்னருக்கு அழைத்து, அவளுக்காக நீங்களே சமைத்து தரலாம். இம்முயற்சி அவளின் மேல் நீங்கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் எனபதை விளக்கும்.

அழகை புகழ்ந்து பேசுங்கள்
இதற்காக முன் கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய அழகை நல்ல முறையில் புகழ்ந்து பேசுங்கள். பொதுவாகவே பெண்கள் அழகாக தோற்றமளிக்க கடும் முயற்சிகளை செய்யவும் மற்றும் உங்களிடம் தங்களை அழகாக காட்டவும் முயற்சி செய்வார்கள், எனவே அவர்களை புகழ்ந்து பேசுவதை மிகவும் விரும்புவார்கள்.

இன்ப அதிர்ச்சி கொடுங்கள்
காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக் கூடியவைகள் அல்ல. நீங்கள் அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவளை டின்னருக்கு அழைத்துச் செல்லலாம். அவளுக்கு தெரியாமல் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்பாராத நேரத்தில் பரிசளித்தல் போன்றவை அன்பை காட்டும்.

பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துதல்
இது இதயம் பலவீனமானவர்களுக்கான விஷயம் அல்ல. உங்கள் காதலிக்கு பொது இடங்களில் உதட்டில் முத்தம் கொடுத்தலும் மற்றும் பின்புறத்தை தடவுவதும், நீங்கள் அவளுக்கு எவ்வளவு முக்கியதுவத்தை அளிக்கிறீர்கள் என்பதை வெளிபடுத்தும்.

உண்மையும்.. மரியாதையும்..
இந்த பாய்ண்ட் தான் நீங்கள் எந்த அளவிற்கு அவளை விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கு மிக அதிக மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு உறவில் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருப்பதும் மற்றும் அவளை மிகவும் மரியாதையுடன் நடத்துவதும் மிகவும் அவசியம்.

அவளுடன் இருப்பது
உங்கள் காதலி சில சமயங்களில் உங்களின் உதவியையோ அல்லது துணைக்கு ஒருவரையோ தேடலாம். இந்த தருணங்களில் நீங்கள் அவளுடன் இருப்பது உங்கள் அன்பை உறுதியாக்கும் மற்றும் உங்களது அக்கறையையும் காதலையும் வெளிபடுத்தும்.

காதல் வார்த்தை
காதல் மற்றும் அன்பு தொடர்பான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். மிக முக்கியமான தருணங்களில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் உண்மையான காதலுடன் காதல் வார்த்தைகளை சொன்னால், அது கண்டிப்பாக வேலை செய்யும்.



Click it and Unblock the Notifications