Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுத்தி பத்து பாய் பிரண்ட் இருந்தால் நல்லதுதானே....
பெரும்பாலான பெண்களுக்கு ஆண் நண்பர்களுடன் வெளியே செல்வது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் நிறைய பெண்களுக்கு நண்பர்கள் கூட்டத்தில் நிச்சயம் ஒரு ஆண் நண்பனாவது இருப்பார்கள். சொல்லப்போனால் பெண்களுக்கு தோழிகளை விட தோழர்கள் தான் அதிகம் பிடிக்கும்.
ஏனெனில் தோழர்கள் வைத்திருக்கும் பெண்களிடம் எதற்கு தோழிகளை விட தோழர்களை அதிகம் பிடிக்கும் என்று கேட்டால், அவர்கள் சொல்வது பாதுகாப்பு, நேர்மை போன்றவை இருக்கும் என்று தான். ஏனெனில் பெண்களுக்கு பொறாமை குணம் இருக்கும். மேலும் பிரச்சனை என்றால் சில சமயங்களில் உதவமாட்டார்கள். ஆனால் தோழர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எந்நேரத்திலும் எந்த உதவியையும் செய்யக்கூடியவர்கள். சொல்லப்போனால் நண்பர்களுக்கு உயிரையே கொடுப்பார்கள்.
அதனால் தான் பெண்கள் தற்போது சமூகத்திற்காக பயந்து வாழாமல், தமக்கு நல்ல பாதுகாப்பு இருக்கும் நண்பர்களுடன் அஞ்சாமல் பழகுவதோடு, வெளியே கூட செல்கிறார்கள். இப்போது ஆண் நண்பர்கள்/தோழர்கள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

நேர்மை
ஆண்கள் ஒரு பெண்ணை தோழியாக ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கு நேர்மையானவராக இருப்பார்கள். அவர்களை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். அந்த அளவில் அவர்கள் நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.

சிறந்த ஆலோசகர்
பெண்களுக்கு தோழர்கள் இருந்தால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று தான், ஏதேனும் அவசரமான சூழ்நிலையில் அவர்களிடம் ஆலோசனைக் கேட்டால், உடனே சிறந்த முடிவை சொல்வார்கள்.

நல்ல பொழுதுபோக்கான நண்பர்கள்
ஆண்களுக்கு எப்போதும் த்ரில் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே உங்களுக்கு த்ரில் பிடிக்கும் என்றால், தோழர்களுடன் ட்ரக்கிங் செல்லலாம்.

பொறாமை
பெண்களுக்குள் நிச்சயம் பொறாமை குணம் இருக்கும். அது தோழியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, ஏதேனும் அழகான பொருளை வாங்கிவிட்டால், அதே மாதிரியான பொருளை நாமும் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. தோழி ஏதேனும் வாங்கினால், நன்றாக உள்ளது என்று பாராட்டி விட்டுவிடுவார்கள்.

பாதுகாப்பு
தோழர்களுடன் வெளியே சென்றால், எந்தவித பயமுமின்றி, நிம்மதியாகவும், தைரியமாகவும் செல்ல முடியும். ஏனெனில் எந்த பிரச்சனையானாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் தோழிகளுடன் தனியாக பயமின்றி செல்ல முடியாது.

உதவும் மனப்பான்மை
உலகிலேயே உதவும் மனப்பான்மை நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது. அதிலும் ஆண் நண்பர்கள் இருந்தால், உலகில் எந்த ஒரு விஷயத்தையும் வென்றுவிடலாம்.
அதற்காக தோழிகளை மோசம் என்று சொல்லவில்லை. தோழிகளும் சிறந்த நண்பர்கள் தான். ஆனால் தோழிகளை விட, தோழர்களால் அதிக நன்மைகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
