Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
காதல் முறிவிற்கு பின் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!!!
காதல் என்பது இந்த உலகில் பரவி கிடக்கிறது. காதல் மற்றும் கோவில் இல்லாத ஊரே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால் காதல் என்று ஒன்று இருந்தால், காதல் முறிவும் இருக்கத் தான் செய்யும். ஆமாம், காதலித்த எல்லோரும் ஒன்று சேர்கிறார்களா என்ன?
காதல் முறிவு என்பது உங்கள் வாழ்க்கையை பாழாக்கும் ஒரு காலமாகும். இல்லை, அது உங்கள் கண்களை திறக்கச் செய்யும் ஒரு காலமாகும். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து தான் காதல் முறிவு நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. இந்த காதல் முறிவு ஏற்பட்ட பிறகு, பொதுவாக அனைவரும் செய்யும் முக்கியமான தவறுகள் சில உள்ளன. அது அவர்களின் வழியை நீட்டிக்கவே செய்யும். அதனால் காதல் முறிவு ஏற்பட்டால் நாங்கள் கூறும் சில அறிவுரைகளை பின்பற்றினால், உங்கள் வாழ்வில் நிம்மதி குடியேறும். சரி, காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மனம் போன போக்கில் டேட்டிங் செல்வது
ஆம், காதல் முறிவால் தேங்கி விடாமல் வாழ்க்கையை தொடர ஜாலியான பேர்வழிகளை சந்தியுங்கள். ஆனால் பழைய உறவை மறக்க வேண்டி மனம் போன போக்கில் டேட்டிங் செல்கிறீர்களா? அப்படியானால் அது கண்டிப்பாக கூடாது. பழைய உறவை பற்றி நினைக்க கூட செய்யாதீர்கள். அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

பழசை எண்ணி வாழ்வது
அவளை பற்றி நினைப்பது, அவள் சொன்னதையெல்லாம் நினைவு கூறுவது, இருவரும் சேர்ந்து செய்தது மற்றும் இருவர் சம்பந்தப்பட்ட விசேஷ தருணங்கள் என இவையனைத்தையும் நினைப்பது தவறான செயலாகும். இதனால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். மாறாக நிகழ் காலத்தில் வாழ்ந்திடுங்கள். இல்லையென்றால் வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள்.

உங்கள் காதலியை அழைப்பது
உங்கள் காதலியின் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். அதனால் முறிவு ஏற்பட்டாலும் கூட, அவளை தொடர்பு கொள்ள உங்களை தூண்டும். அப்படி ஆகாமல் தடுக்க அவள் தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்து விடுங்கள்.

உறவினர்/நண்பர்களுடன் இருப்பதை தவிர்ப்பது
தனிமையில் சில நேரம் கழிப்பதும் நல்ல யோசனை தான். நடந்த தவறை பற்றி சிந்திக்கவும், உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்த தனிமை உங்களுக்கு கை கொடுக்கும். இருப்பினும் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது ஆபத்து. அது உங்களை மிகவும் தனிமைப்படுத்திவிடும். அதனால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுங்கள். அதை விட மருந்து வேறு ஏது?

உச்சபட்சத்திற்கு செல்லுதல்
காதல் முறிவு ஏற்படும் போது, அதனை மறக்க அதிகப்படியான மது அருந்துவது என்பது ஆபத்தில் முடியும். ஆகவே இவ்வகை தீமைகளில் இருந்து ஒதுங்கியே இருங்கள். இவ்வகை அறிகுறிகள் தெரிந்தால், அந்த பழக்கத்திற்குள் ஆழமாக செல்லாதீர்கள்.

நீங்கள் சந்திக்கும் அடுத்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்தல்
காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு பெண்ணின் இனிமையான பேச்சுக்கும், மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத பெரும் தவறாகும். முறிவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப மட்டுமே செய்கிறாள் உங்களின் புதிய காதலி.

உடலுறவில் ஈடுபடுவது
காதல் முறிவு ஏற்பட்ட காரணத்திற்காக, மனதை ஆற்ற உடனே வேறொரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளக்கூடாது. காதல் முறிவுக்கு பின் உடல் உறவு கொள்ள துடிப்பதை தவிர்க்கவும். இது உங்கள் மனம் இயல்பு நிலைக்கு மாற அவகாசம் அளிக்கும். உங்களுக்கான சரியான பெண்ணை பார்க்கும் போது, மனம் அமைதியுடன் இருக்கும்.

தனிமையாக இருப்பது
காதல் முறிவால் எப்போதும் தனிமையில் நேரத்தை கழித்தால், அது பிரச்சனையை தான் உண்டாக்கும். அவளை நினைப்பது மட்டுமல்லாது, அவளை கூப்பிட முயற்சி செய்வீர்கள், அவள் நினைவை தரும் பொருட்களைப் பார்ப்பீர்கள்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தனிமையை தவிர்க்கவும்.

அவள் பேஸ்புக் பக்கத்திற்கு அடிக்கடி செல்வது
அவள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிய, அவளின் பேஸ்புக் பக்கத்திற்கு அடிக்கடி செல்வதும் பெரிய தவறாகும். அவள் சாதாரண முறையில் மற்ற ஆண்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தால் கூட, அது உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்.

அவளின் நெருங்கிய தோழியிடம் அவளை பற்றி விசாரிப்பது
ஆம், நீங்கள் காதலித்து கொண்டிருந்த போது, உங்கள் காதலியின் நெருங்கிய தோழி தான் உங்கள் இருவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்திருப்பார். ஆனால் இன்று அவள் உங்கள் காதலிக்கு மட்டுமே நெருங்கிய தோழியாக இருப்பாள். அவளிடம் இருந்தும் விலகியே இருங்கள்.
காதல் முறிவு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. சொல்லப்போனால் ஒரு புதிய தொடக்கத்திற்கு அது ஒரு ஜன்னலாக கூட விளங்கலாம். அதனால் அதிலிருந்து சீக்கிரம் விடுபட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.



Click it and Unblock the Notifications