Latest Updates
-
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
காதலை முறிவடையச் செய்யும் காரணங்கள்!!!

பொதுவாக காதலில் பிரிவு இருக்கிறதென்றால், அது இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் தான் ஏற்படும். ஆனால் சிலருக்கோ எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்திற்காக பிரிந்துவிடுகின்றனர். இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் இவ்வாறு தான் பிரிகின்றனர். அது என்ன காரணங்கள் என்று தெரிய வேண்டுமா? அப்படியெனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* காதலிப்பவர்களுடன் வெளியே செல்லும் போது, அழகாக இருப்பவர்களை பார்ப்பது சாதாரணமான ஒரு விஷயம். இந்த உலகில் அழகை ரசிப்பது பெரிய தவறு இல்லை. ஆனால் காதல் செய்துவிட்டு, அழகை ரசித்தால், தவறாகிவிடும் போல் இருக்கிறது. ஏனென்றால், துணையுடன் வெளியே சென்று விட்டு, அப்போது யாராவது ஒருவர் அழகாக செல்லும் போது, அவர்களை பார்த்ததை, துணை பார்த்துவிட்டால், அந்த காரணத்தைக் கொண்டே சிலர் பிரிந்துவிடுகின்றனர். இது தான் பெரும்பாலானோருக்கு இருக்கும் காதல் பிரிவிற்கான காரணங்களுள் முதன்மையானவை.
* சிலர் எப்போது பார்த்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் அவ்வாறு குறை கூறுவது எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் தினமும் எந்த ஒரு செயலை செய்தாலும், குறை கூறினால், அதனால் ஆத்திரமடைந்து, பிரிவு ஏற்படுகிறது.
* பெரும்பாலான காதல் பிரிவிற்கு திருமணம் என்ற ஒரு வார்த்தையும் காரணம். ஏனெனில் இருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருப்பார்கள். அதை ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல், பிரிந்து விடுகின்றனர். காதல் செய்தால், திருமணம் நிச்சயம் நடக்கும் தான். ஆனால் அதைப் பற்றி அடிக்கடி பேசினால், நம்பிக்கை இல்லையோ என்று சந்தேகம் குடிப்புகுந்து, பின் காதல் வாழ்க்கைக்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும்.
* இன்றைய காலத்தில் காதல் செய்பவர்கள் முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சாதாரணமான ஒன்று. இத்தகைய செயல்கள் பொதுவாக காதல் அதிகமானால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் நடைபெறும். ஆனால் இந்த செயல்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பர், சிலரோ மனநிலையைப் பொறுத்து ஈடுபடுவர். இந்த நிலையில் இருவருக்குள் சிறு சண்டை வந்துவிட்டு, அதனை சமாதானப்படுத்த அருகில் செல்லும் போது கோபமாக இருப்பதால், தள்ளி விடுவர். இவ்வாறு தள்ளி விடுவதால், கூட சிலரது காதல் பிரிவில் முடிந்துள்ளது.
* அனைவரும் எதிர் எதிர் முனைகள் தான் ஈர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வாறு எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் பிரிவுகள் ஏற்படும். எப்படியெனில் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் தான் ஒத்து போகும். பல விஷயங்கள் எதிராக இருக்கும். இப்படி இருக்கையில் ஒரு காலக்கட்டத்தில் சகிப்புத்தன்மை குறைந்து, இருவருக்கும் உள்ள காதலானது மறைந்து, பிரிவை ஏற்படுத்தும். இந்த நிலையில் பிரிவு ஏற்பட்டால், பிரிவிற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
என்ன நண்பர்களே! மேலே குறிப்பிட்டுள்ளவை சரிதானா? வேறு ஏதாவது இருந்தால், அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications