Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
ஹனிமூன் தம்பதிகள் சந்தோசமா இருக்காங்களா?
புதிதாக திருமணமான தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் ஜோடியாக சுற்றுவார்கள். புது இடங்களுக்கு தனிமையில் ஹனிமூன் செல்வார்கள், ஒருவித கிரக்கத்தில் திரிவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவித அச்ச உணர்வுடன் இருக்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
திருமண மயக்கம் என்பது புதுமணத்தம்பதியர் அனைவருக்குமே இருக்கக் கூடியதுதான். இதனாலேயே ஒரு ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை முடிந்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது ஆகும். இந்திய தம்பதிகளுக்கு இந்த மயக்கத்தோடு கர்ப்பமும் இணைந்து கொள்ளும்.

அதேசமயம் ஆஸ்திரேலியா நாட்டில் புதுமணத்தம்பதிகள் 73 முதல் 76 சதவிகிதம் பேர் வரை ஒரு வித அச்ச உணர்வுடனே வாழ்வதாக கூறியுள்ளனர். டிய்க்கின் பல்கலைக்கழக ஆஸ்திரேலிய மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்தது.
தேனிலவு என்பது சம்பிரதாயத்துக்குரிய சடங்கு தானே தவிர உண்மையில் கணவன், மனைவி இருவரும் திருமணமான முதல் வருடத்தில் மனதார மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே அதிக நேரமும் அக்கறையும் எடுத்து கொள்கின்றனராம். அதனாலேயே புது மணத்தம்பதிகள் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணமான இரண்டாவது வருடத்தில் இருந்தில் 78 சதவிகிதம் பேர் சராசரியான நிலைக்கு திரும்பி விடுவதாக கூறியுள்ளனர். திருமணமாகி 5 முதல் 13 வருடங்களுக்குள் அவர்களின் சேமிப்பு, குழந்தை பிறப்பு, பொருளாதாரம் போன்றவைகளை திட்டமிடுவதாகவும் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
