Latest Updates
-
மிதுனத்தில் 3 கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 4 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கப்போகுது. -
கோடை வெயிலால் அவதியா? இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வையுங்க… குளிர்ச்சியும் பணவரவும் தானாக தேடி வரும்! -
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க.. -
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்! -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

* பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.
* பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.
* நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.
* சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர். வேறு என்ன காரணங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications