Latest Updates
-
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
குடும்பத்தில் சண்டையைத் தடுக்க 'காந்தியம்' கை கொடுக்குமா?

கணவனோ, மனைவியோ இருவரில் யார் சண்டை போட்டாலும் ஒருவர் அடங்கிப் போய் விடுவதுதான் நல்லது. அப்போதுதான் சண்டை சீக்கிரமே முடிவுக்கு வர முடியும். இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக கத்திக் கொண்டிருந்தால் சண்டை வலுத்து பெரும் போர்க்களமாகி விடும் வாய்ப்புள்ளது.
இந்த இடத்தில் நமக்கு காந்தி கை கொடுப்பார். அதாவது காந்தியடிகளின் அகிம்சை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகிய குணங்களை, தத்துவங்களை தம்பதியர் கடைப்பிடித்தால் 'வன்முறை' இல்லாத குடும்பமாக நமது குடும்பத்தை மாற்ற முடியும்.
காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்திய வழியி்ல் எப்படி உறவுகளைப் பாதுகாக்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம்...
மோதல்களுக்குத் தீர்வு
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். எனவே ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்த இடத்தில் சகிப்புத் தன்மை, பொறுமை ஆகிய காந்திய தத்துவங்கள் நமக்குக் கை கொடுக்கும். கணவர் அல்லது மனைவி இருவரில் ஒருவர் சண்டை வலுக்கும்போது அமைதியாகி விட வேண்டும். என்ன திட்டினாலும் மகா பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நம்முடன் சண்டைக்கு வந்தவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும், பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.
தெளிவாக, உறுதியாக இருங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது காந்தியைப் போல செயல்பட வேண்டும். அதாவது நாம் எடுக்கும முடிவு சரியா, தவறா என்பதை பலமுறை யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மற்றவர்ளுக்கு தீங்கிழைக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லாம் சரி என்று உணர்ந்தால் தைரியமாக அந்த முடிவை எடுக்கலாம். அதேசமயம், அதை அடையும் வரை உறுதியுடன் இருக்க வேண்டும்.
எதிலும் சமாதானம்
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அமைதியான முறையில் அதற்காகப் போராட வேண்டும். கணவருடன் சண்டையா, அவருடன் எந்த வாக்குவாதமும் வேண்டாம். மாறாக சகிப்புத்தன்மையுடன் அவரிடம் அன்று கூடுதல் பாசம் காட்டுங்கள். மனைவியுடன் மோதல் வரும்போது கணவரும் இவ்வாறு
செய்யலாம்.
இப்படி உறவுகளிலும் கூட காந்தியத்தை ஒவ்வொரு இடத்திலும் நாம் கடைப்பிடிக்க முடியும்.



Click it and Unblock the Notifications