Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
புதுமணத் தம்பதியருக்கு எதற்கெல்லாம் சண்டைகள் வரும் தெரியுமா?

திருமணம் ஆன முதலில் இருவரும் முதன் முறையாக ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் வீட்டில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது. உதாரணமாக, காலையில் லேட்டாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல் கூட துலக்காமல் பால் குடிப்பது, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும். மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளானது வரும்.
திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்களை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள். அவ்வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதையே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும்.
மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோஷத்தில் அலுவலகத்தில் இருக்கலாம். ஆனால் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ்வாறு லேட்டாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்துவிடும். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பை விட, அவர்களை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.
திருமணத்திற்கு பின், தம்பதியர்கள் தனியாக வீடு எடுத்து தங்கினால், தங்கள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது அந்த வேலையை சரியாக செய்யவில்லையென்றால், அதற்கும் சண்டைகளானது வரும். அந்த சண்டைகளை விட கூட்டுக்குடும்பத்தில் இருந்தால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. உதாரணமாக, மனைவி அவள் வீட்டில் நிறைய வேலைகளை செய்யாமல் இருந்து, கூட்டுக் குடும்பத்தில் வந்தவுடன் அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டி வந்தால், அப்போது என்ன வரும்? வேறு என்ன சண்டை தான்.
இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததால், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்காமல் போக, அந்த நேரத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப் போய் விபரீதம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.
ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
