Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?

1. 'தயவுசெய்து, என்னை மன்னித்துவிடு' என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையும் கூட. நீங்கள் தவறு செய்து அதை ஒப்புக்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்துவிடுவாள்.
2. 'நடந்ததை மறந்துவிடு' என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லும் முன் முதலில் நீங்கள் சண்டை போடும் எண்ணத்தில் இல்லாமல், சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். பின் காதலியிடம், நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் கெட்டு போகும். ஆகவே நடந்ததை மறந்துவிடு என்று சொல்ல வேண்டும். முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை என்றால், ஒரு மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்த படி ஒரு சிம்பிள் போட்டு அனுப்பலாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.
3. 'சரி! இனிமேல் செய்ய மாட்டேன், நினைவில் வைத்துக் கொள்கிறேன்' என்று செல்லுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவிடுங்கள். அப்படி சொல்லாமல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத்துக் கொண்டே போகும். சின்ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப்படுத்தலாம். இப்படி சொல்லும் போது இதில் ஒரு உணர்ச்சி தெரிய வேண்டும், அது தான் முக்கியம். ஆனால் தவறை காதலி செய்தால், நீங்கள் இதை சொல்லக் கூடாது, இல்லையென்றால் அவர்கள் என்ன செய்தாலும், நீங்கள் அவர்களுக்கு கட்டுப்படுவது போல் இருக்கும்.
4. 'நீ கோபத்துல கூட அழகா இருக்க' என்று சொல்லலாம். மேல சொன்ன மூன்று வரிகளை விட இதுவே மிகவும் பவர்ஃபுல் வரி. இதனால் அவர்கள் விரைவில் குளிர்ந்து விடுவர். இந்த வார்த்தைகளை மெதுவாக அவர்கள் கைகளை பிடித்து, காதுக்கு அருகில் சென்று சொன்னால், அந்த நொடியே அவர்கள் கரைந்து விடுவர். அதுவும் இப்படி சொன்னதும் அவர்கள் முகத்தை பார்த்தால் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள்.
என்ன, இப்படியெல்லாம் சொல்லி கோபப்படுற உங்க காதலியை சாமாதானப்படுத்த ரெடியா இருக்கீங்களா!!! இப்ப இந்த நான்கு பவர்ஃபுல் வரியில் எதை நீங்க சொல்லி சமாதானப்படுத்தப் போறீங்க?



Click it and Unblock the Notifications