Latest Updates
-
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
Wheat Flour Mixed Vegetables Cutlet Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான, அதே சமயம் ருசியான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு கட்லெட் பிடிக்குமா? அப்படியானால் கோதுமை மாவும், ஒருசில காய்கறிகளும் இருந்தால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் கட்லெட் செய்யுங்கள். இந்த கட்லெட்டை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், பிள்ளைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி அடிக்கடி செய்து கொடுக்கவும் சொல்வார்கள்.

உங்களுக்கு இந்த கோதுமை மாவு வெஜிடேபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு வெஜிடேபிள் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன் + பொரிக்க தேவையான அளவு
* வெங்காயம் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1
* கேரட் - 2 (துருவியது)
* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கசூரி மெத்தியை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து 1 கப் கோதுமை மாவை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* ஒருவேளை நீர் போதவில்லை என்றால், சிறிது நீரை தெளித்து நன்கு
பிரட்டி விட்டு வேக வைத்து இறக்கி மூடி வைத்து கை பொறுக்கும்
சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* பின் மாவை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து கையில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்த மாவில் சிறிது
எடுத்து, கட்லெட் போன்று தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,
தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயில் வைத்து, முன்னும்
பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான கோதுமை
மாவு மிக்ஸ்டு வெஜிடேபிள் கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications