1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..

Posted By:

Wheat Flour Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது சாப்பிட கேட்டு நச்சரிக்கிறார்களா? அதுவும் இனிப்பாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், ரவையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு சுவையான அப்பம் செய்து கொடுங்கள்.

இந்த கோதுமை அப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். இந்த மாதிரியான அப்பத்தை ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Wheat Flour Appam How To Make a Wheat Flour Appam Recipe

உங்களுக்கு கோதுமை மாவு அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/4 கப்
* தேங்காய் - 1 சில்லு
* ஏலக்காய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் 1/2 கப் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. ஓரளவு நீராக இருக்க வேண்டும்.
* பிறகு அந்த மாவை 1/2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, அரைத்த தேங்காய் பொடியை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி, பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை மாவு அப்பம் தயார்.

Image Courtesy: Aashirvaad Svasti Milk

[ of 5 - Users]
Story first published: Thursday, April 18, 2024, 18:34 [IST]
Desktop Bottom Promotion