கோதுமை மாவை வெச்சு ஒருமுறை காலையில் இந்த டிபனை செய்யுங்க. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது...

Posted By:

Gothumai Adai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு காலை டிபனை செய்யுங்கள். அதற்காக தோசை, சப்பாத்தி என்று செய்யாமல், அதைக் கொண்டு அடை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wheat Adai Dosa How To Make a Gothumai Adai Dosa Recipe

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 3/4 கிலோ
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் கைகளால் அவற்றை பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை வைத்து, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள அடையை சேர்த்து, எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை அடை தயார். இதேப் போல் அனைத்து மவையும் சுட வேண்டும்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Thursday, August 22, 2024, 7:10 [IST]
Desktop Bottom Promotion