Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 டம்ளர் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் கட்டுப்படும்...
Weight Loss Pachai Payaru Kanji Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இன்னும் சிலர் உடல் பருதனால் சிரமப்படுபவார்கள். இப்படி அதிகரித்த உடல் எடையை குறைக்கவும் மற்றும் உடல் சூட்டை கட்டுப்படுத்தவும் ஒரு அற்புதமான வழி உள்ளது.
அது தான் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் பச்சை பயறு கஞ்சி குடிப்பது. இந்த கஞ்சியில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும். இதன் மூலம் எடை இழப்புக்கு உதவும். இது தவிர அதிகரித்த உடல் சூட்டையும் தணிக்க உதவி புரியும்.

உங்களுக்கு இந்த பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* பச்சரிசி - 1/4 கப்
* தண்ணீர் - 1 1/2 லிட்டர்
* வெல்லம் - 1/4 கிலோ
* உப்பு - 2 சிட்டிகை
* ஏலக்காய் - 3 (தட்டியது)
* சுடுநீர் - 1/4 லிட்டர்
* துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு வறுத்து, அதையும்
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பச்சை பயறை சேர்த்து, சற்று
கொரகொரவென்று பொடித்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த பச்சரிசியை சேர்த்து, அதையும் கொரகொரவென்று
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த பச்சை பயறு மாவு மற்றும்
பச்சரிசி மாவை ஒன்றாக எடுத்து கலந்து, அத்துடன் 1 1/2 லிட்டர் நீரை
ஊற்றி, கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்கு 5 நிமிடம் கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் பொடித்த வெல்லத்தை
சேர்த்து, கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக உப்பு மற்றும் தட்டி வைத்துள்ளள ஏலக்காயை சேர்த்து நன்கு 1
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, துருவிய தேங்காயை சேர்த்து கிளறினால்,
சுவையான பச்சை பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
