Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
Kuthiraivali Kanji For Weight Loss In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? முக்கியமாக அதற்காக ஜிம் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் எப்போதும் சுவையில்லாத உணவுகள் தான் இருக்குமா? அப்படியானால் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியும் சிறுதானியங்களை காலை உணவில் சேர்த்து வாருங்கள்.

சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி. இந்த குதிரைவாலியில் நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த குதிரை வாலியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வரும் போது எடை இழப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உங்களுக்கு இந்த குதிரைவாலி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி கஞ்சி ரெசிபியின் எனிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி - 1 கப்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குதிரைவாலி அரிசியை நீரில் 3-4 முறை நன்கு கழுவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கழுவி வைத்துள்ள
குதிரைவாலி அரிசியை சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பிறகு அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி,
குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்தால், சுவையான குதிரைவாலி
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
