இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க..

Posted By:

Weight Loss Karuppu Kavuni Payaru Kanji Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட நினைக்கிறீர்களா? அப்படியானால் அவ்வப்போது சிறுதானியங்கள், கருப்பு கவுனி அரிசி போன்றவற்றைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள்.

Weight Loss Kanji Recipes How To Make Karuppu Kavuni Payaru Kanji

அதுவும் கருப்பு கவுனி அரிசியுடன், பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து வாரத்திற்கு 3 முறை குடித்து வரும் போது ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை இரண்டு விதங்களில் செய்து சாப்பிடலாம். ஒன்று தேங்காய் பால் சேர்த்து உட்கொள்ளலாம், மற்றொன்று மோர் சேர்த்து உட்கொள்ளலாம். முக்கியமாக இந்த கஞ்சியை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

உங்களுக்கு இந்த கருப்பு கவுனி பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி பச்சை பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* பச்சை பயறு - 1/2 கப்
* தண்ணீர் - 6 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால்/மோர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 3-4 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, குறைந்தது 8-10 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் பச்சை பயறை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்து, பின் ஊற வைத்த பச்சை பயறை ஒரு துணியில் கட்டி, ஒரு நாள் முழுவதும் முளைக்கட்ட வைக்க வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் அரைத்த கருப்பு கவுனி அரிசியை எடுத்துக் கொண்டு, அத்துடன் முளைக்கட்ட வைத்த பச்சை பயறை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 6 கப் நீரை ஊற்றி, சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* அதன் பின் இந்த கஞ்சியை இரண்டு விதத்தில் செய்யலாம். ஒன்று கஞ்சியுடன் தேவையான அளவு கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
* இல்லாவிட்டால் வேக வைத்த கஞ்சியை குளிர வைத்து, மோர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 9, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion