Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிச்சுகிட்டு வாங்க.. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, எடை சீக்கிரம் குறையும்
Weight Loss Karunkuruvai Arisi Kanji Recipe In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் அதிக கவனம் செலுத்துவீர்களா? குறிப்பாக உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் எடையை அசுர வேகத்தில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் நம் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கருங்குறுவை அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள்.
கருங்குறுவை அரிசி உடலுக்கு நல்ல வலிமையைத் தரும், உடம்பில் உள்ள நச்சுக்கள்/கழிவுகளை வெளியேற்றி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. கருங்குறுவை அரிசியானது கருப்பு கவுனி போன்ற மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்களைக் கொண்டது.

சொல்லப்போனால் 10 கைப்பிடி முருங்கைகீரையில் எவ்வளவு சத்து இருக்குமோ, அந்த அளவு சத்து 1 கப் அரிசியில் உள்ளது. அவ்வளவு சத்தான அரிசியைக் கொண்டு தயாரிக்கும் கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.
உங்களுக்கு கருங்குறுவை அரிசி கஞ்சி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா.? கீழே கருங்குறுவை அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களும
தேவையான பொருட்கள்:
* கருங்குருவை அரிசி - 1 கப்
* தண்ணீர் - 8 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் கருங்குறுவை அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் அல்லது
7 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரிசி ஊறியதும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரை எடுத்து, அதில் பொடித்த கருங்குறுவை அரிசியை
சேர்த்து, அத்துடன் அரிசி ஊற வைத்த நீரையும் சேர்த்து 8 கப் நீரை
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடியாக
நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சி மிகவும் கெட்டியாக
இருந்தால், சுடுநீரை ஊற்றி, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து
கலந்தால், சுவையான மற்றும் சத்தான கருங்குறுவை அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications