Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை 2 மடங்கு வேகமா குறையும்...
Weight Loss Thinai Arisi Masala Kanji Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் சிறுதானியங்களை அதிகம் சேர்த்து வாருங்கள். சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரிகிறது. எப்படியெனில் சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது. மேலும் சிறுதானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.
அப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்று தான் திணை அரிசி. இந்த திணை அரிசியைக் கொண்டு மசாலா கஞ்சி தயாரித்து தினமும் ஒரு கப் குடித்து வரும் போது உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக இந்த திணை அரிசி கஞ்சி செய்வது என்பது மிகவும் சுலபம். முக்கியமாக இது பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் குடிக்கலாம்.

உங்களுக்கு திணை அரிசி மசாலா கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திணை அரிசி மசாலா கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - 10 இலைகள்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* திணை அரிசி - 1 கப்
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் திணை அரிசியை நீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, புதினா இலைகளை
சேர்த்து, 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து ஊற வைத்த திணை அரிசியை நீரில் கழுவிவிட்டு, பின் அந்த திணை
அரிசியை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 5 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
பரிமாறினால், சுவையான திணை அரிசி மசாலா கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
