Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Weight Loss Vegetable Chicken Soup Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? இந்த டயட்டில் இருக்கும் போது இரவு நேரத்தில் பெரும்பாலும் சாலட் தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் அவ்வப்போது சூப்பையும் குடியுங்கள். அதுவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் குடியுங்கள்.

இந்த சூப் வயிற்றுக்கு இலகுவானது மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடியது. இதில் கலோரிகளும் குறைவு. இருப்பினும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். உணவின் மீதான ஆசைகளையும், இரவு நேர பசியையும் கட்டுப்படுத்த உதவும். முக்கியமாக இந்த சூப்பை எடையைக் குறைக்க குறைக்க நினைப்போர் இரவு நேரத்தில் மட்டுமின்றி, மதிய உணவின் போதும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வெஜிடேபிள் சிக்கன் சூப் ரெசிபி குறித்து fitelo_tamil என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெஜிடேபிள் சிக்கன் சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சிக்கன் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் நெஞ்சுக்கறி - 100 கிராம்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* கேரட் - 1
* உருளைக்கிழங்கு - 1
* பிரியாணி இலை - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சாஸ் பேனை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் காய்கறிகளின் மேல் சிக்கன் நெஞ்சுக்கறியை வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பிரியாணி இலை, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு,
மிளகு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம்
வேக வைத்து இறக்க வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதை வெளியே எடுத்து, சிக்கனை பிச்சுப்போட்டு
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் காய்கறிகளை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை மீண்டும் சாஸ் பேனில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
சிக்கனை சேர்த்து, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெஜிடேபிள் சிக்கன் சூப்
தயார்.



Click it and Unblock the Notifications
