Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Village Style Small Onion Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டு கிராமத்து ஸ்டைலில் காரக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த காரக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை செய்தால் 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 7 பல்
* சின்ன வெங்காயம் - 25-30
* உப்பு - சுவைக்கேற்ப
* பெங்களூர் தக்காளி - 1 1/2
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* புளி - 1 எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* வெல்லம் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கட்டிப் பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை,
பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வெங்காயத்தை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பெங்களூரு தக்காளியை அரைத்து சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் சாம்பார் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு 10 நிமிடம் பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி கொதிக்க வைத்து
இறக்கினால், கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
