Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
1 கப் சேமியா, 2 முட்டை இருந்தா.. குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செஞ்சு தரலாம்..
Vermicelli Biscuit Recipe In Tamil: இன்று மாலை பள்ளி முடிந்து பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியா மற்றும் முட்டை உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். அது தான் சேமியா பிஸ்கட். முக்கியமாக இந்த ஸ்நாக்ஸை ஒருமுறை செய்தால், அதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த சேமியா ஸ்நாக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த சேமியா ஸ்நாக்ஸின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேமியா - 1 கப்
* முட்டை - 2
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் சேமியாவை எடுத்து, அதில் 2 முட்டைகளை உடைத்து
ஊற்றி, ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சர்க்கரை, ஏலக்காய்,
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்தது ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்
அதில் கோதுமை மாவு, நெய், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு சப்பாத்தி
மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள
வேண்டும். பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை ஸ்பூன் கொண்டு தட்டையாக
அழுத்தி, நடுவே ஸ்பூனின் விளிம்பைக் கொண்டு பூ போன்று கோடுகளை போட
வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தயாரித்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு
முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சேமியா
பிஸ்கட் தயார்.
* இந்த பிஸ்கட்டை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்திருந்தால்,
ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
Image Courtesy: Cookingandtipscafe



Click it and Unblock the Notifications









