Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
ஒருடைம் வேர்க்கடலை சட்னியை இந்த பக்குவத்துல செய்யுங்க.. டேஸ்ட் சும்மா டக்கரா இருக்கும்...
Verkadalai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இதற்கு பெரும்பாலும் சட்னி தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை சட்னி என்றால் பிடிக்குமா? இதனால் அடிக்கடி இந்த சட்னியை செய்வீர்களா?
ஆனால் இந்த வேர்க்கடலை சட்னியை பலவாறு செய்யலாம். அதில் ஒரு ஸ்டைலை தான் பார்க்கப் போகிறோம். இப்படி ஒருமுறை வேர்க்கடலை சட்னியை செய்தால், பின் இப்படி தான் எப்போதும் செய்வீர்கள். அந்த அளவில் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* புளி - சிறிய துண்டு
* வேர்க்கடலை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கொத்தமல்லி - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
