Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
காய்கறிகளை வைச்சு இந்த வெஜிடபிள் பேன் கேக் செஞ்சு கொடுங்க... காய்கறி பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
Vegetable Pan Cake Recipe in Tamil: பேன் கேக் பலருக்கு பிடித்தமான தின்பண்டங்களில் ஒன்று. இதை செய்வதும் எளிது என்பதால் பல விதமான சுவைகளில் பழங்களை சேர்த்தும் செய்யப்படும். ஆனால் சிலருக்கு இனிப்பு பிடிக்காது என்பதால் இதை தவிர்ப்பார்கள்.
இதை காரமாக காய்கறிகள் சேர்த்து செய்தால் இனிப்பு பிடிக்காதவர்களும், இனிப்பு சாப்பிட முடியாதவர்களுக்கும் சிறந்த தேர்வாக அமையும். எப்படி வெஜிடபிள் பேன் கேக் செய்வது என இங்க பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு - ½ கப்
- பொட்டுக்கடலை - ½ கப்
- முட்டைகோஸ் - 1 கப்
- கேரட் - 2
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 5 பல்
- மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து கரும்பூஞ்சை இல்லாதவாறு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து நறுக்கி எடுத்து கொள்ளவும்.
- கேரட் மற்றும் முட்டைகோஸை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ், மற்றும் பூண்டை போட்டு நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
- அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், மற்றும்
சீரகத்தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின் அதில் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு
மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
- பின் அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும்.
- அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் கோதுமை மாவு மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.
- பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து மாவை தட்டும் பதத்திற்கு கொண்டு வரவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு எடுத்து தட்டை வடிவத்திற்கு தட்டி கொள்ளவும்.
- பின் அதை தோசை கல்லில் சேர்த்து இரு புறமும் நன்கு பொன் நிறமாக மாறும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் பேன் கேக் ரெடி!



Click it and Unblock the Notifications
