Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
சாதம், சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் சுவையான வெஜ் குருமா ரெசிபி... செஞ்சு பாருங்க... நீங்களே அசந்துருவீங்க!
Vegetable Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை தான் செய்வார்கள்? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் இந்த வெஜ் குருமாவை செய்யுங்கள். அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், மசாலா அரைத்து குக்கரில் அனைத்தையும் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கினால் போதும். மற்ற குருமவைப் போல அல்லாமல் இந்த குருமா சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த எளிமையான மற்றும் சுவையான வெஜ் குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கேரட் - 2
- உருளைக்கிழங்கு - 2
- நூக்கல் - 1
- பீன்ஸ் - 10
- பச்சைப் பட்டாணி - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2,
- தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 5 பல்
- ஏலக்காய் - 3
- பட்டை - 1 சிறிய துண்டு
- பிரிஞ்சி இலை - 1
- கிராம்பு - 4
- தேங்காய் - அரை மூடி
- முந்திரி - 10
- தனியா - ஒரு ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும்.
- தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். 2-3 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- இந்த குருமா இட்லி, சப்பாத்தி, புரோட்டா மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











