Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
காளான் உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபி
அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான காளான் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, காளான் மற்றும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி ப்ரை செய்வது தான்.
இந்த ரெசிபியானது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த காளான் உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
காளான் - 2 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
கிராம்பு - 2
பூண்டு - 2 (தட்டியது)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின்னர் கிராம்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கை போட்டு, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான காளான் உருளைக்கிழங்கு ப்ரை ரெடி!!!



Click it and Unblock the Notifications
