For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தய குழம்பு ஈஸியா எப்படி செய்றதுன்னு பாக்கலாம் வாங்க!

வெந்தய குழம்பு நீங்கள் மேற்கொள்ளும் போது இந்த டிப்ஸ் அவசியம் பயன்படும்.

By Staff
|

தேவையான பொருட்கள்:

வெந்தயம்: ஒரு தேக்கரண்டி

புளி: ஒரு கைப்பிடி அளவு

உளுந்துப் பருப்பு: ஒரு தேக்கரண்டி

பெருங்காயம்: ஒரு துண்டு

மிளகாய் வற்றல்: 7

கடுகு: அரைத் தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி: 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை: ஒரு கொத்து

உப்பு: தேவையான அளவு


செய்முறை:

முதலில் புளியைக் கரைத்துக் கொள்ளவும். புளிநீரில் சாம்பார்ப் பொடி, உப்பு, கறிவேப்பிலை ஆகியவை சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய விடவும். அதில் கடுகைப் போட்டு, வெடித்ததும்மிளகாய் வற்றலைப் போட்டு சிறிது வறுக்கவும். அதனுடன் வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு புரட்டவும்.

அதனுடன் உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து 10நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்பு அரிசி மாவை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கரைத்து ஊற்றவும். கொதி வந்ததும் இறக்கி விடவும். இப்போது வெந்தயக்குழம்பு தயார்.

English summary

Recipes of Tamilnadu:Venthaya Kulambu

Recipes of Tamilnadu:Venthaya Kulambu
Desktop Bottom Promotion