Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
வெண்டைக்காய் அவியல்
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பார்கள். எனவே குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் இதனை அவியல் போன்று செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு மிகவும் சிம்பிளாக வெண்டைக்காய் அவியலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 15
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்பு புளிச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு 15 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், வெண்டைக்காய் அவியல் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications