ரம்ஜானுக்கு அசைவம் மட்டும்தான் பண்ணனுமா? வாங்க டேஸ்ட்டி யாக்னி புலாவ் பத்தியும் தெரிஞ்சுக்கலாம்!!

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

இப்தார் வருவதால் விதவிதமான சமையலை ஆரோக்கியம் பொங்க...வீட்டினருக்கு செய்து அசத்த வேண்டுமென அனைவரும் ஆசைகொள்கின்றனர். இந்த நீண்ட விரத நாட்களில்...நாம் ஆரோக்கியமானதையும் சத்துக்கள் நிறைந்தவற்றையும் உண்ண வேண்டியது அவசியமாகும். இன்று நாம் செய்யப்போகும் இந்த சைவ யாக்னி புலாவ்...ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்ததாக அமைந்து உங்களை மகிழ்விக்க தயாராகிறது.

இப்தாருக்கு அதிகம் காய்கறிகளை மட்டுமே உண்ண விருப்பமுள்ளோர்களும்...சைவ பிரியர்களும் நிறையவே இங்கே இருக்கின்றனர். அப்பேற்ப்பட்ட பிரியர்களுக்கு, ருசீகரமான விருந்தாக அமைந்து இப்தாரை சிறப்பிக்க காத்துகொண்டிருக்கிறது இந்த சைவ யாக்னி புலாவ்.

Vegetarian Yakhni Pulao For Ramzan

இந்த யாக்னி புலாவை நாம் சமைப்பதற்கு...அதிக கவனம், பாதுகாப்பு மற்றும் நேரமும் உங்களுக்கு தேவைப்படுகிறது. இவையற்ற ஒரு யாக்னி புலாவ் உங்களுக்கு சிறந்ததாக அமைவதுமில்லை. இந்த யாக்னி புலாவை செய்ய முயற்சி செய்யாமல் விட்டுவிடாதீர்கள். உங்களுடைய உழைப்பு அனைத்தும் மிகவும் மதிப்புமிக்கது என்பதனை புலாவ் தயாரானதும் நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள். வாருங்கள், இந்த ரெசிபி எப்படி செய்வது என நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மசாலாவிற்கு :

கொத்தமல்லி விதைகள் - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பெருஞ்சீரகம் விதைகள் - ½ டீ ஸ்பூன்

இஞ்சி - 5" (இஞ்ச்) பீஸ்

பூண்டு - 5 முதல் 6 கிராம்பு

சைவ ஸ்டாக்/யாக்னிக்கு தேவையானவை:

காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பூக்கோசு, காலிபிளவர் இன்னும் பல - 1 ½ கப்

பட்டாணி - ½ கப்

தண்ணீர் - 4 லிருந்து 5 கப்

உப்பு - சுவைக்கேற்ப

Vegetarian Yakhni Pulao For Ramzan

சைவ யாக்னி புலாவிற்கு தேவையானவை:

நெய் - 2 டீ ஸ்பூன்

பாஸ்மதி அரிசி - 1 கப் (30 நிமிடங்களுக்கு முன் ஊறவைக்கப்பட்டது)

பே இலைகள் - 2 லிருந்து 4

நறுக்கப்பட்ட வெங்காயம் - பெரியது 1

பச்சை ஏலக்காய் - 2 லிருந்து 4

கருப்பு ஏலக்காய் - 1

இலவங்கப்பட்டை - 1 இஞ்ச்

கருமிளகு - 4 லிருந்து 5

கிராம்பு - 5

வறண்ட தயிர் - 1 டீ ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

அழகுபடுத்த தேவையானவை

பழுப்பு நிற மிருதுவான வெங்காயம் - 1 கப்

கொத்துமல்லி தழை - 1 கப்

புதினா இலை - ½ கப்

வறுத்த முந்திரி - 10 லிருந்து 11

நெய் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அனைத்து மசாலாப் பொருட்களையும் எடுத்து ஒரு துடுப்பு துணியுடன் கட்டி கொள்ளுங்கள்.

இந்த ஸ்டாக்கை தயாரிப்பது எப்படி?

1.யாக்னிக்கு தேவையான அனைத்து மசாலா பொருட்களையும் கடாயில் போட வேண்டும். (மசாலா பேக்கில் இருப்பனவற்றை)

2.காய்கறிகள் அரை நிலையில் வேகும் வரை... கொதிக்க வைக்க வேண்டும்.

4.வடிகட்டியை கொண்டு காய்கறிகளிலிருந்து... ஸ்டாக்கை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். அந்த காய்கறிகளை ஓதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.

5.இப்பொழுது அந்த ஸ்டாக்கை ஒரு பௌலில் எடுத்துகொள்ள வேண்டும். புலாவ் செய்த பிறகு, அந்த ஸ்டாக்கை கொண்டு சூப் அல்லது மற்றவகை வெஜ் டிஷ்களுக்கு நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Vegetarian Yakhni Pulao For Ramzan

சைவ யாக்னி புலாவ் செய்வது எப்படி?

1.ஒரு ஆழமான அடிபாகமுடைய கடாயில் நெய்யை ஊற்றி கொள்ள வேண்டும்.

2.அந்த நெய் சூடானதும், ஒட்டுமொத்த மசாலாவையும் அதில் சேர்க்க வேண்டும்.

3.அந்த மசாலா நன்றாக மணக்கும் வேளையில்...வெங்காயத்தை அத்துடன் சேர்த்துகொள்ள வேண்டும். அதன் நிறம், பழுப்பு நிறமாக தோன்றும் வரை பொறிக்க வேண்டும்.

4.இப்பொழுது ஊற வைக்கப்பட்ட பாஸ்மதி அரிசியினை சேர்க்க வேண்டும்.

5.ஒரு நிமிடத்திற்கு அந்த அரிசியினை பொறிக்க வேண்டும்.

Vegetarian Yakhni Pulao For Ramzan

6.அதன் பின்... ஓரமாக வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்க வேண்டும். நன்றாக காய்கறிகளை எல்லா பக்கமும் கிண்டி விட வேண்டும்.

7.இப்பொழுது, ஸ்டாக் மற்றும் சால்ட் சேர்க்க வேண்டும். ஸ்டாக்குடன் ஏற்கனவே உப்பு இருப்பதனை மறந்துவிடாதீர்கள். அதனால், மறுபடியும் உப்பு சேர்க்கும்போது...உங்கள் சுவைக்கேற்ப உப்பினை சரி பார்த்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

8.அத்துடன் தயிரை சேர்த்து நன்றாக கிண்டி கொள்ளவும்.

9.இப்பொழுது அதனை இறுக்க மூடிகொள்ள வேண்டும்.

10.நடுத்தர சூட்டுடன்... 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு புலாவை சமைக்க வேண்டும்.

Vegetarian Yakhni Pulao For Ramzan

11.அதன் பின்னர், அந்த அரிசி நன்றாக வெந்துவிட்டதா? என்பதனை உறுதி செய்துகொண்டு, அப்படி இல்லையெனில்... வெப்பத்துடன் ஸ்டாக்கை (WARMED STOCK) சேர்த்து...அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

12.இவை அனைத்தும் முடிந்தபின்...கொத்துமல்லி மற்றும் புதினா தழைகளையும் முந்திரி, மற்றும் பழுப்பு நிற வெங்காயத்தை கொண்டு புலாவினை அழகுபடுத்தவும்.

13.அதன்பின்னர் புலாவ் மீது 1 டீ ஸ்பூன் நெய்யை ஊற்றவும்.

14.ரைத்தாவுடனோ அல்லது க்ரேவியுடனோ சேர்ந்து, இந்த புலாவை சுடசுட பரிமாறி உண்டு மகிழலாம்.

English summary

Vegetarian Yakhni Pulao For Ramzan

Vegetarian Yakhni Pulao For Ramzan special,