Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
வெஜிடேபிள் சீஸ் சாண்ட்விச்
காலையில் பலர் சமைத்து சாப்பிடுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, பிரட்டைக் கொண்டு சாண்ட்விச் செய்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சாண்ட்விச் செய்வதற்கு அவ்வளவு நேரம் தேவையே இல்லை. குறிப்பாக பேச்சுலர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் தான், சாண்ட்விச் அதிகம் சாப்பிடுவார்கள்.
அந்த சாண்ட்விச்சில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சீஸ் சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை பிரட் - 4-8 துண்டுகள்
சீஸ் துண்டுகள் - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அதன் முனைகளை நீக்கிவிட்டு, ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, பின் அதன் மேல் வெஜிடேபிள் கலவையை வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி, முன்னும் பின்னும் வெண்ணெய் தடவி பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், சுவையான வெஜிடேபிள் சீஸ் சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications
