Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்!
சட்னி என்றாலே அனைவருக்கும் தேங்காய் சட்னிக்கு அடுத்தப்படியாக கொத்தமல்லி சட்னி தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் இந்த சட்னி அவ்வளவு சுவையாக இருக்கும். அது இட்லிக்கு ஆகட்டும் அல்லது தோசைக்கு ஆகட்டும், கொத்தமல்லி சட்னியின் சுவைக்கு இணை எதுவும் வராது.
ஆனால் அந்த கொத்தமல்லி சட்னியை பலவாறு செய்யலாம். அதில் இங்கு இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரி, இப்போது கொத்தமல்லி சட்னியின் இரண்டு வழிகளைப் பார்ப்போமா!!!

வழி: 1
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 5-6 பல்
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
* பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும்.
வழி: 2
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - சிறிது
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
* இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி ரெடி! இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த பச்சையுடன் காணப்படும்.



Click it and Unblock the Notifications
