Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பேச்சுலர்களுக்கான... தக்காளி பச்சடி
தற்போது தக்காளியின் விலை குறைவாக இருப்பதால், அந்த தக்காளியைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுங்கள். அதிலும் கோடை ஆரம்பிக்கப் போகிறது. ஆகவே தக்காளியை சாப்பிட்டால், உடலின் வெப்பமானது தணிக்கப்படும். குறிப்பாக தக்காளியை மையமாக கொண்டு என்ன செய்வது என்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஒரு எளிமையான ரெசிபியைக் கொடுத்துள்ளது.
இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். அந்த ரெசிபிக்கு பெயர் தக்காளி பச்சடி. இந்த ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தக்காளி - 6
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு தக்காளியை போட்டு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, கரண்டி அல்லது மத்து கொண்டு சிறிது மசித்தால், சுவையான தக்காளி பச்சரி ரெடி!!!



Click it and Unblock the Notifications
