Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குடைமிளகாய் ரோல்
காலை வேளையில் நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தயார் செய்ய நினைத்தால், குடைமிளகாய் ரோல் சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த ரெசிபிக்கு எந்த ஒரு சைடு டிஷ் தேவையில்லாததால், இதனை காலையில் சமைப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை செய்யலாம்.
சரி, இப்போது அந்த குடைமிளகாய் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி கெட்சப் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த ஒவ்வொரு சப்பாத்தியிலும் குடைமிளகாய் கலவையை சிறிது பரப்பி, ரோல் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் ரோல் ரெடி!!!
குறிப்பு:
ஒருவேளை இரவில் செய்த சப்பாத்தி இருந்தால், அதனை சூடேற்றிக் கொண்டும், இந்த ரெசிபியை செய்யலாம்.



Click it and Unblock the Notifications
