Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
சுவையான தோசை ரெஸிபி

தோசை மாவு அரைக்க
அரிசி : 4 கப்
உளுந்து : 1 கப்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
இவற்றை ஒன்றாக 4 மணி நேரம் வரை ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.
வெரைட்டி தோசைக்கு தேவையான பொருட்கள் :
தக்காளி பொடியாக நறுக்கியது - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
பருப்பு பொடி 1 கப்
பருப்பு பொடி செய்முறை
உளுந்தம் பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த கறிவேப்பிலை – 1 கப்
வரமிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
இந்த பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கரகப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடி இட்லி, தோசைக்கு ஏற்றது. பொடி தோசை செய்யவும் உபயோகிக்கலாம்.
தக்காளி தோசை
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்த உடன் தோசை மாவை ஊற்றவும். அதன் மேல் நறுக்கி வைத்த தக்காளியை தூவி லேசாக எண்ணெய் விடவும். மூடி போட்டு வேகவிடவும். பின்னர் திருப்பி போட்டு வேகவிடவும். சுவையான தக்காளி தோசை தயார்.
ஆனியன் தோசை
தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல மாவை ஊற்றவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை மிதமாக தூவவும். எண்ணெய் விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பின்னர் வெந்த உடன் திருப்பி போட்டு வேகவிடவும். மொறு, மொறு ஆனியன் தோசை தயார்.
பொடி தோசை
தோசை மாவை கல்லில் ஊற்றவும். அதன் மீது பருப்பு பொடியை தூவவும். வேகும் போது சுற்றி நெய் விடவும். மூடிபோட்டு சிம்மில் வேகவிடவும். இதை திருப்பி போடத் தேவையில்லை. சுவையான பொடி தோசை தயார்.
இந்த தோசைகளுக்கு தேங்காய் சட்னி, அல்லது கொத்துமல்லி சட்னி செம காம்பினேசன். சுட்டீஸ்க்கு செய்து கொடுத்து அசத்துங்களேன்.



Click it and Unblock the Notifications
