Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா?
சுண்டைக்காய் வத்தக்குழம்பு
அனைவருக்குமே வத்தக்குழம்பு என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் சுண்டைக்காய் வத்தக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, சுண்டைக்காய் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். சுண்டைக்காய் வத்தக்குழம்பை சூடாக இருக்கும் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் - 1/4 கப்
புளி - 1/2 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15 (தோலுரித்தது)
பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது)
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் சுண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுண்டைக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
