Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
முருங்கைகாய் கார குழம்பு

தேவையான பொருட்கள்:
முருங்கைகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள முருங்கைகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு, முருங்கைகாய் வேகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
காய் வெந்ததும், அதில் புளிக் கரைசலை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும். குழம்பானது நன்கு சுண்டியதும், அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி, இறக்கி விடவும்.
இப்போது சுவையான முருங்கைகாய் கார குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
