Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சிந்தி பாஜி ரெசிபி
பொதுவாக விரதம் இருக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் இப்போது நவராத்திரி விரதம் இருக்கும் சமயம் என்பதால், அந்த நவராத்திரியில் விரதம் இருப்போருக்கு ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது தான் சிந்தி பாஜி ரெசிபி. இந்த ரெசிபி ஒரு சிந்தி ரெசிபி. இது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும்.
சரி, இப்போது அந்த சிந்தி பாஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 3 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கட்டு
தில் இலைகள் - 1/4 கட்டு
கடலைப் பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் கீரைகளை நன்கு நீரில் அலசி, நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி, கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதனை மத்து கொண்டு கடைந்தால், சுவையான சிந்தி பாஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
