Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஷாஹி பன்னீர்
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு ஒரு ராயலாக விருந்து வைத்தது போன்று இருக்க, ரொட்டி அல்லது புலாவ் செய்து, அதனை சைடு-டிஷ்ஷாக ஷாஹி பன்னீர் செய்தால், அந்த விருந்தே தனி தான். ஏனெனில் பொதுவாக அரச குடும்பத்தினர், இந்த கிரேவியைத் தான் செய்து சாப்பிடுவார்கள். அத்தகைய கிரேவியை அவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா என்ன?
அந்த ஷாஹி பன்னீரை நம் வீட்டிலேயே சுவையாக செய்து, விருந்தினர்களை அசத்தலாமே! இப்போது அந்த ஷாஹி பன்னீரின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
முந்திரி - 6-7
தயிர் - 1/2 கப் (அடித்தது)
ப்ரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து, அதனை நான்காக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, வெங்காயத்தை, பச்சை மிளகாய் உடன் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் முந்திரியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், முந்திரி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து வெள்ளை மிளகு தூள், மல்லி தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைக்க வேண்டும்.
பின் தயிர் சேர்த்து 2 நிமிடம் கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு, உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து, கிளறிவிட்டு, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் ஏலக்காய் தூள் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து, நன்கு கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான ஷாஹி பன்னீர் ரெடி!!! இதனை புலாவ் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications