Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம்
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் திகழ்ந்தார். தனது கொள்கைகளின் சக்தியால், சந்திரகுப்த மௌரியர் என்ற சாதாரண இளைஞரை மகதப் பேரரசின் அரியணையில் அமர வைத்தார். சாணக்கியரின் கொள்கைகள் கடந்த காலம் மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில், சாணக்கியரின் கொள்கைகள் நிர்வாகம் மற்றும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே பயனுள்ளதாக இருக்கின்றன. அவரது 'சாணக்கிய நீதி' என்ற நூலில், மனித வாழ்க்கையை எளிதாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவதற்கான பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனது அறிவுரைகளில் தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் குறித்த பல விஷயங்களை சாணக்கியர் விவரித்துள்ளார்.
செல்வம், தொழில் வாழ்க்கை, திருமணம், நட்பு, பகை மற்றும் வணிகம் போன்ற பல்வேறு விவகாரங்களுக்கான தீர்வுகளை சாணக்கியர் வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி சாணக்கிய நீதி, ஆண்-பெண் இடையிலான உறவு மற்றும் அவர்களின் குணாதிசயங்கள் குறித்தும் விவாதிக்கிறது. திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வாகும். ஆண்-பெண் இருவருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் வந்து, எல்லா வகையான அன்பையும் அக்கறையையும் வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு நல்ல வாழ்க்கைத்துணை ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டுவருவார் என்று கூறப்படுகிறது.
கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகவும், அனைத்து தருணங்களிலும் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்பவர்களாகவும் விளங்குகிறார்கள். இருப்பினும், சில விஷயங்களை தங்கள் மனைவியிடம் மறைத்து வைப்பதே நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார். இல்லையெனில், எதிர்காலத்தில் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். ஆண்கள் தங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று சாணக்கியர் கூறும் விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பலவீனம்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து உங்கள் மனைவியிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் பலவீனம் உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டால், அவர் தனது வாதத்தை எப்போதும் நிலைநாட்ட அதைப் பயன்படுத்திக்கொள்வார். வாக்குவாதத்தின் போது அவர் உங்கள் பலவீனத்தை வைத்து உங்களை வீழ்த்த முயல்வார். எனவே, உங்கள் பலவீனத்தை ஒருபோதும் யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள்.
அவமானங்கள்
ஆச்சார்ய சாணக்கியர் தனது 'நீதி சாஸ்திர'த்தில், ஆண்கள் தாங்கள் சந்தித்த அவமானங்களைப் பற்றி ஒருபோதும் தங்கள் மனைவியிடம் வெளிப்படையாக் கூறக்கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் பெண்கள் அதே அவமானத்தை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கேலி செய்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தானம்
தானம் என்பது ரகசியமாகச் செய்யப்படும்போது மட்டுமே அதற்கான பலன்களைக் கொடுக்கிறது. நீங்கள் செய்யும் தானத்தைப் பற்றி ஒருபோதும் உங்கள் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது உங்கள் தானத்தின் மதிப்பதைக் குறைப்பது மட்டுமல்லாமல், தானத்திற்காகச் செய்யப்பட்ட செலவைக் குறித்து குறை சொல்லி, உங்கள் மனைவி உங்களை கோபமூட்டும் வகையிலோ அல்லது குறை கூறும் வகையிலோ பேசுவதற்கும் வழிவகுக்கலாம்.
வருமானம்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் வருமானம் குறித்து உங்கள் மனைவியிடம் ஒருபோதும் முழுமையாக கூறக்கூடாது. உங்கள் வருமானம் பற்றி அவர் தெரிந்துகொண்டால், அதன் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தி உங்கள் செலவுகள் அனைத்தையும் தடுக்க முயல்வார். இதன் விளைவாக, சில சமயங்களில் அவசியமான பணிகள் கூட பாதிக்கப்படக்கூடும். இது உங்களின் சுதந்திரத்தை முற்றிலும் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications

