Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
சாம்பார் வடை
பொதுவாக வடை என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் உளுத்தம் பருப்பு வடை என்றால், மிகவும் பிடிக்கும். இத்தகைய உளுத்தம் பருப்பு வடை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சிலர் இந்த வடையை சாம்பாரில் போட்டும் சாப்பிடுவார்கள் மற்றும் சிலரோ சட்னியுடன் சாப்பிடுவார்கள்.
அத்தகைய சாம்பார் வடை எனப்படும் உளுத்தம் பருப்பு வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்து, நன்கு மென்மையாக அதிகப்படியான நீரை சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் பருப்பு மாவை போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி, மிளகு, வெங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கையை நீரில் நனைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி, நடுவே விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது அருமையான சாம்பார் வடை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
