For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி சாதம் ஈஸியா தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்!

அவசரமாக தக்காளி சாதம் கிளறும் போது இந்த டிப்ஸ் கண்டிப்பா யூஸ் ஆகும்.

By Staff
|

தேவையான பொருட்கள்:

அரைக்கிலோ தக்காளி, 200 கிராம் வெங்காயம், 7 மிளகாய், 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு, அரை தேக்கரண்டி கடுகு, 1தேக்கரண்டி சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் கொத்துமல்லி இலை


செய்முறை:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் போட்டு ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டுகடுகு, உளுந்து பருப்பை வறுக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளிப்பழத்தை நறுக்கிப்போட்டு, சாம்பார்ப் பொடியைச் சேர்த்து வதக்கவும்.

வாணலியில் இருப்பவற்றை சாதத்தின் மீது கொட்டி நன்றாகக் கிளறவும். பின்னர் உப்பு, கொத்தமல்லி இலைகளைப் போட்டு சாதத்தை நன்றாகக் கிண்டவும். இப்போது தக்காளிசாதம் ரெடி.

English summary

Simple Tips To Make Tomato Rice

Simple Tips To Make Tomato Rice
Desktop Bottom Promotion