Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்
சாதாரண முட்டைக்கோஸை விட, சிவப்பு நிற முட்டைக்கோஸில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்னவென்றால் சிவப்பு நிற முட்டைக்கோஸில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டவை. குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸானது அல்சருக்கு மிகவும் சிறந்தது.
எனவே அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளோர், சிவப்பு நிற முட்டைக்கோஸை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், அல்சரைப் போக்கலாம். இங்கு அந்த சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - சிறிது (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, பின் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டினால், பொரியலானது நீல நிறத்தில் மாறும். பின் அதில் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியல் ரெடி!!!
Image Courtesy: Senthil Janaki



Click it and Unblock the Notifications