Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலக் டோஃபு கிரேவி
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும்.
சரி, இப்போது அந்த பாலக் டோஃபு கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
பட்டை
-
3
துண்டு
பிரியாணி
இலை
-
1
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டேபிள்
ஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
1
(நறுக்கியது)
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
2
டீஸ்பூன்
டோஃபு
-
200
கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர்
-
தேவையான
அளவு
பால்
-
1/2
கப்
சோள
மாவு
-
1
டீஸ்பூன்
பசலைக்கீரை சமைப்பதற்கு...
பசலைக்கீரை/பாலக்
-
4
கப்
(நறுக்கியது)
பூண்டு
-
2
பற்கள்
பச்சை
மிளகாய்
-
1
(நறுக்கியது)
தண்ணீர்
-
1/2
கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5-7 நிமிடம் நன்கு கீரையை வேக வைக்க வேண்டும். பின் அதனை இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி, அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5-8 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
இறுதியில் அதில் டோஃபு சேர்த்து குறைவான தீயில் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
அடுத்து பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!