Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வெண்டைக்காய் மோர் குழம்பு
மோர் குழம்பு பிரியர்களே! உங்களுக்காக ஒரு அருமையான மோர் குழம்பு ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதிலும் இந்த ரெசிபியை நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம். அது என்னவென்றால், அது தான் வெண்டைக்காய் மோர் குழம்பு. இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
சரி, இப்போது அந்த வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
இதுப்போன்று வேறு: முருங்கைக்காய் தக்காளி கிரேவி: ஆந்திரா ரெசிபி

தேவையான பொருட்கள்:
புளித்த தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 4-5 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 1
தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
