Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல்
கத்திரிக்காய் கொண்டு புளிக்குழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பாருங்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள். இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 (பெரியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும்.
பின் அதில் எண்ணெயை தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
