Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
மீல் மேக்கர் கபாப்
எப்போதும் விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அத்தகையவர்களுக்கு ஒரு சூப்பரா ரெசிபி உள்ளது. அந்த ரெசிபியை செய்து சாப்பிட்டால், நிச்சயம் அது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அதிலும் அந்த ரெசிபி பிரியாணிக்கு பயன்படுத்தும் மீல் மேக்கரைப் பயன்படுத்தி செய்யக்கூடியது.
பொதுவாக சிக்கன் கபாப் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் மீல் மேக்கர் கபாப் சாப்பிட்டதுண்டா? இல்லை தானே. அப்படியெனில், அந்த மீல் மேக்கர் கபாப் ரெசிபியை, இந்த வாரம் முயற்சி செய்து பாருங்கள். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை தண்ணீரில் இருந்து எடுத்து, நீரை முற்றிலும் பிழிந்து விட வேண்டும்.
பின்பு அதன் மேல் இஞ்ச பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த பேஸ்ட்டில் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த மீல் மேக்கரை, அதில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மைக்ரோ ஓவனை 200 டிகிரில் சூடேற்றி, பேக்கிங் டிஷ்ஷில் ஊற வைத்துள்ள மீல் மேக்கரை வைத்து, அதன் மேல் சிறிது அந்த கலவையை ஊற்றி, எண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் க்ரில் செய்ய வேண்டும். பின் அதனை திருப்பிப் போட்டு, 3-4 நிமிடம் க்ரில் செய்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மீல் மேக்கர் கபாப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
